என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 19 டிசம்பர், 2016

பேராசிரியர். அன்பழகன் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்


உடன்பிறவா சகோதரியால் உருக்குலைந்து போகும் நாட்டில் உடன்பிறவா சகோதரனுக்கு இலக்கணமாய்த் திகழும் பேராசிரியர் அய்யா அன்பழகன் அவர்கள் கலைஞரையும் கட்சியையும் கண்ணெனக் காத்து வருவதைக் காண்பீர் என் தமிழரே என்று சொல்வதில் தான் எவ்வளவு கர்வம் எங்களுக்கு?

இன்று நேற்றல்ல 1942 ஆம் ஆண்டில் கல்லூரி மாணவராய் இருந்தபோது கலைஞருக்குத் துணையாய் நின்றவர் இதோ 74 வருடங்களாக கட்சியின் உயர்வுக்கும்  கலைஞரின் உயர்வுக்கும் உறுதுணையாக அதே நட்புடனும் அதே சகோதரத்துவத்துடனும் இன்னும் அதிகமான அன்புடனும் கலைஞர் அருகிலே அமர்ந்து அன்பாலே அவரை ஆண்டுகொண்டு இருக்கிறார்.

75 ஆண்டு Platinum Jubilee  நோக்கிப் பயணிக்கும் இந்த நட்பிற்கு என் வாழ்த்துக்களும் பேராசிரியர். அன்பழகன் அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களும் தெரிவிப்பதில் அளவிலா மகிழ்வும் பெருமையும் அடைகிறேன். அய்யா அவர்கள் சீரான உடல்நலத்துடனும் சீரிய சிந்தனையுடனும் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.



மாநில ஒருங்கிணைப்பாளர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை இலக்கிய அணி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக