என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் தேவையா?

நேற்று சசிகலா "படித்ததை" இன்றுதான் பார்த்தேன். கைதட்டி ஆரவாரம் செய்ய ஒரு கூட்டம். என்னடா இது என்று யோசித்துக்கொண்டே இன்னொரு கூட்டம்.
எதிர் கட்சியாக இருந்தாலும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றால் வெளியில் சொல்ல பெருமை பட்டிருக்கிறோம். காரணம் அவரின்அறிவும் ஆளுமையும். ஆனால் இன்றைய தமிழக முதலமைச்சரின் நிலை என்ன?
நேற்று சசிகலா படித்து முடித்தவுடன் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர் கால்களில் விழுகிறார். இது தமிழகத்திற்கே தலைகுனிவு. இந்தக் காட்சியைப் பார்த்த இந்தியாவின் மற்ற மாநில மக்கள் தமிழகத்தை எவ்வளவு கேவலமாகப் பார்த்திருப்பார்கள் என்பதை யூகிக்க முடிகிறது.
வீர மறவர் குலம் என்று சொல்லும் தமிழர்களின் மானத்தையே வாங்கிவிட்ட இந்த கம்பீரமே இல்லாத முதலமைச்சர் நாட்டை எப்படி முன்னேற்றுவார் என்ற பெரிய கேள்விக்குறியே தோன்றியது.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அந்த மாநில மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். இவர் எப்படிப்பட்ட எடுத்துக்காட்டாக இருக்கிறார்?
உண்மையிலேயே இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் நாட்டுக்குத் தேவையே இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக