என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

தமிழ் அறிஞர் திரு மணவை முஸ்தபா என்றென்றும் நினைவில் ...

இரங்கல் செய்தி.....

தமிழ் அறிஞர் திரு மணவை முஸ்தபா அவர்களின் மறைவு கேட்டு மனது கனக்கிறது.

யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக இருந்த மணவை முஸ்தபான அவர்கள் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு "என் தவத்தில் என்ன குறை? " வெளியீட்டு விழாவில்  கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். பெருமைமிகு தமிழறிஞரால் வாழ்த்துப்பெற்ற பெரும் பேறு பெற்றேன்.

அறிவியல், கணினி, தொழில் நுட்பம், மருத்துவம் போன்றவற்றின் தமிழில்  கலைச்சொல் அகராதி  தமிழுலகத்திற்கு அளித்த  மிகப்பெரிய தமிழறிஞர். தமிழ் மொழிக்கு செம்மொழி பட்டம் கிடைக்க பாடுபட்டவர்களில் மிக முக்கியமானவர்.

அய்யா அவர்களின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

உடலால் மறைந்தாலும் ஈடில்லாத தமிழ்த் தொண்டு செய்த அய்யா மணவை முஸ்தபா அவர்கள்  தமிழுலகில் என்றென்றும் நீடித்த புகழுடன் நிலைத்திருப்பர்.....

என் உள்ளார்ந்த அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.


- லதாராணி பூங்காவனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக