என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

வேங்கடப்ப நாயக்கரும் வேதம் ஓதிய பார்ப்பானும்




18 ஆம் நூற்றாண்டில் வேங்கடப்ப நாயக்கர்னு ஒருத்தர் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். நிலபுலன் சொத்து சுகம்,  பலவிதமான வியாபாரம்னு அப்போதே லட்சக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக இருந்தார்.

கடவுள் பக்தியோ சொல்லவே முடியாது.. அந்த அளவுக்கு பக்திப்  பழமாக இருந்தார். அவருக்கு வாய்த்த துணைவியாரோ இவரையும் விட அதிகமான கடவுள் பக்தி உடையவர்.

14 ஆம் நூற்றாண்டிலிருந்து கண்முடித்தனமாக பாலாபிஷேகம், கும்பாபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தி  என்றும்  தோஷம், பரிகாரம், சாங்கியம், சம்பிரதாயம், தர்ப்பணம், பித்ரு, கல்யாணம்,கருமாதி என்று  பக்தியிலும் மூடப்பழக்கங்களுளிலும் நம் தமிழ்ச் சமூகத்தை  அடிமையாக்கி வைத்திருந்த "பார்ப்பன"க் கூட்டம் சும்மா விடுமா?

அடிச்சதுடா நமக்கு யோகம்னு அந்த பணக்கார வேங்கடப்ப நாயக்கர் காலை கெட்டியா பிடுச்சுண்டுட்டா.

ஆக, அந்த ஊர்ல இருந்த பார்ப்பனக் கூட்டத்திற்கு படியளந்தது அந்த வேங்கடப்பா தான்.

வெள்ளிக்கிழமை லட்சுமி பூஜை பண்ணுங்கோ... சனிக்கிழமை பெருமாளை சேவியுங்கோ... அமாவாசைக்கு தர்ப்பணம் பண்ணுங்கோ.. ஐயப்பனுக்கு மாலை போடுங்கோ ... செவ்வாக்கிழமை துர்க்கைக்கு பூஜை போடுங்கோ...ன்னு தினம் ஏதாவது " விசேஷமா"  சொல்லி பூஜை போட்டு, பூஜை  செய்ற பிராமணாள்க்கு  பட்டுவேட்டி துண்டு, பழங்கள்  தானியங்கள் கொடுங்கோ.... குடும்பம் சுபிக்ஷமா இருக்குமோன்னோன்னு  ஒரு நாள் விடாம விசேஷத்தை சொல்றது .... அப்படி ஏதும் விஷேஷம் இல்லைன்னா... அச்சச்சோ  பூனை குறுக்க வந்துடுச்சா , விளக்கு வச்ச நேரத்துல பல்லி கத்திடுச்சா, ... தோஷம் பட்டுடிச்சே... தோஷ நிவர்த்தி பண்ணிடுவோம் பெரியவாள்ன்னு சொல்றது...

அதுமட்டுமில்லாம அந்த மனுஷன் தூக்கத்துல காணும் கனவுக்கு கூட  பரிகாரம் பண்றது..  அச்சச்சோ கனவுல எருமை வந்துடுச்சா? எமதர்மன் பாசக்கயிறு தூக்கிண்டு வர்றானே...  குடும்பத்துக்கு கேடாச்சே....  என்னது நேத்து கனவுல நாய் வந்ததா?... அடடா காலபைரவனோன்னோ ... என்னது யானை பள்ளத்துல இறங்கற மாதிரி கனவா.... ஐயோ வியாபாரம் சரிஞ்சுடும்ங்கறதுக்கு அறிகுறியாச்சே நாயக்கர்வாள்ன்னு புலி வந்தா எலி வந்தா, நரி வந்ததா, பரிவந்தா ன்னு ஒவ்வொண்ணுத்துக்கும் பயமுறுத்தி அந்த மனுஷனை நிம்மதியா தூங்ககூட விடாம எப்போதும் அந்த வீட்டுல பரிகாரம், தோஷம், பூஜை என்ற பேர்ல தினம் தினம் மணியாட்டினது ஆட்டினபடியே , சாப்பாடு போட்டது போட்டபட்டியே, பாப்பானுக்கு தானம் செஞ்சது செஞ்சப்படியே காலம் ஓடுச்சி...

இதையெல்லாம் குழந்தையிலிருந்தே கவனிச்சிக்கிட்டுருந்த அவர் பிள்ளை... ஒரு கட்டத்துல பார்ப்பானை புரட்டி அடிச்சார்..யாரந்த புள்ளையாண்டான்னு
இப்ப  புரியுதோன்னோ ?


பார்ப்பானுங்களுக்கு படியளந்த வேங்கடப்ப நாயக்கருக்கு பிறந்த அந்த மகா பெரியவர்  நம்ம "பெரியார்"தான். அதாவது ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாயக்கர்.

இப்படி பொய் சொல்லி பித்தலாட்டம் பண்ணி வயிறு வளர்த்த கூட்டத்துல பிறந்த பார்ப்பனப் பயல் தான் எஸ். வீ சேகர்.

இந்த பிச்சை இன்றைக்கு தன் முகத்துல தானே எச்சில் துப்பிக்கிட்டது. எப்படி?..

ஸ்ரீ ரங்கத்துக் கோவில் முன்னாடி இருக்கற பெரியார் சிலை பத்தி, பிச்சை வாங்கி சாப்பிட்ட அதே கூட்டத்துல முளைச்ச காளான்  அபிப்ராயம் சொல்லுதாம்...கோயில்னு இருந்தா அது முன்னாடி பிச்சைக்காரங்க இருப்பாங்கதான்...ன்னு .

சேகரா ..உனக்கு  இது கூடவா புரியலே?   எளிமையா சொல்றேன்  நன்னா புரிஞ்சிக்கோ.. சமத்தோல்லியோ ..?

நீ பிச்சைக்காரன் அவர் புரட்சியாளன் .

இன்னும் தெளிவா...

உள்ள இருந்தாலும் வெளிய இருந்தாலும் நீ பிச்சைக்காரன்தான்.
ரோட்ல இருந்தாலும் வீட்ல இருந்தாலும் அவர்  புரட்சியாளர்தான்.

வாழ்க பெரியார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக