என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 23 ஆகஸ்ட், 2017

மாணவர்கள் வேசி நாய்களா .....?


சிங்கராயர் பதிவும் அதற்கான என் பதிலும் 
மாணவர்களை இப்படித் தரம் தாழ்த்திப் பேசுவதை வண்மையாகக் கண்டிக்கிறேன். இன்றைய  இந்தச் சூழ்நிலைக்கு மாணவர்கள் காரணமும் அல்ல. இதெற்கெல்லாம் தங்களுடைய படிப்பை விட்டுவிட்டு போராடிக்கொண்டிருப்பது மாணவர்களின் வேலையும் அல்ல.

அது என்ன நாய்களா... பிச்சைக் கார நாய்களா... வேசி நாய்களா?

மாணவர்களை இப்படிப் பேசும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

17 வயதுக்கும் குறைவான மாணவர்கள் ஓட்டுப்போட்டு தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. அதே நேரம் தகுதி இல்லை என்றாலும் தன்னுடைய சுயநலத்திற்காகவே ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் பின்னால் தலைவர்களின் பின்னால் இருந்துகொண்டு அயோக்கியன் என்று தெரிந்தும் அவர்களுக்காக வாக்குச் சேகரிப்பதும் வக்காலத்து வாங்குவதும் மேடைக்கு மேடை பேசி மக்களைக் கவர்வதும் வீடு வீடாகச் சென்று பணம் கொடுத்தும் மக்கள் மனத்தை மாற்றியும் செயல்பட்டுக்கொண்டிருக்கும்  தொண்டர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் உங்களைப்போன்ற  சுயநலவாதிகளால் தான் நாடு கெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்கிறது.

இதில் மாணவனின் பங்கு என்ன? எதற்காக மாணவன் உங்களை போன்றோரிடமிருந்து வேசிமகன் என்ற வார்த்தைகளை வாங்கவேண்டும்.

நாட்டின் மீது அக்கறை இருந்தால் மாணவர்களைக் கெடுக்காதீர்கள். அவர்கள் படிக்க வேண்டும்.

உண்மையாகவே அக்கறையும் தைரியமும் இருப்பவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு, சொந்த பந்தங்களோடு, நண்பர்களோடு, ஓட்டுப்போட்டு நாட்டைக் கெடுத்தவர்களோடு  ஒன்று சேர்ந்து போராட்டக் களத்தில் இறங்குங்கள்.

போராடுவதற்குத்தான்  கட்சிகளும்  அதன் தொண்டர்களும்.  தேர்தலில் போட்டியிடும் அத்தனை கட்சிகளும் அதனதன் தொண்டர்களும்.

அரசியலை வியாபாரமாக மாற்றி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துவைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் இருக்க, கழிப்பறை வசதியோ நல்ல குடி நீர் வசதியோ  கூட பள்ளி கல்லூரிகளில் அமைத்துத் தராமல், அதைப்பற்றிய கவலை கூட கொள்ளாமல் இருக்கும் எந்த அரசியலார்க்கு  ஆதரவாக மாணவர்கள்  ஒன்று கூடுவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மாணவர்களுக்கு வேண்டிய  சிறந்த கல்வியையும் கல்விக்கூடங்களில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து  கொடுப்பது கட்சிகளின் வேலை. அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவது ஆட்சியாளர்களின் வேலை. ஆட்சியைக் கலைப்பது மாணவர்களின் வேலையல்ல.

எதற்கெடுத்தாலும் மாணவர்கள் வரவேண்டுமென்று ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?  இது கட்சிகளின் வேலை, மற்ற அமைப்புக்களின் வேலை.  மாணவர்கள் வேலை அல்ல.

மாணவர்கள் நாய்களும் அல்ல. வேசி மகன்களும் அல்ல.   மிகவும் கீழ்த்தரமான பதிவு இது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக