செல்வியின் கனவின்று செம்மையாய்ப் பலித்திருக்கும்
புத்தகம் என்னவென்று புல்லர்கள் அறிந்திருந்தால்
பூந்தளிர் இங்கின்று பொசுங்காது பூத்திருக்கும் .
உரிமைகள் என்னவென்று ஊதாரிகள் தெரிந்திருந்தால்
ஊர்மகிழும் நற்பொன்னாய் உருகாது ஒளிர்ந்திருக்கும்
கடமைகள் என்னவென்று கள்வர்கள் கற்றிருந்தால்
வடவரின் சூழ்ச்சியிலே உடையாது மிளிர்ந்திருக்கும்
காவிகள் கண்ணசைவில் காரியங்கள் செய்கின்ற
பாவிகளே போதுமடா பதறவைக்கும் உயிர்ப்பலிகள்
கொடியோர் ஒன்றிணைந்து கொலைபாதகம் செய்திட்டார்.
முடியாதினி முடிவாய் முற்றுகையே ஒற்றை வழி !
தூயதமிழ்ச் செல்விக்குத் தூக்கினையே பரிசளித்த
நாயினத்தை விரட்டிவிட நற்றமிழர் ஒன்றிணைக!
- லதாராணி பூங்காவனம், ஆர்க்காடு .
- லதாராணி பூங்காவனம், ஆர்க்காடு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக