என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

புதன், 6 செப்டம்பர், 2017




தமிழ் நாடே பத்திகிட்டு எரியுது.  மஹாளய பக்ஷம் புண்ணிய காலம் தொடங்கிடுச்சி, .இந்த பதினைந்து நாட்களும் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் தர்ப்பணம் மற்றும் ஸிரார்தங்கள் செய்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்ன்னு பாப்பான் பாட ஆரம்பிச்சுட்டான். 

" மஹாளய பக்ஷம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். ஒட்டுமொத்த முன்னோரையும்  இந்தப் 14 நாட்களில் நினைவு கூறுங்கள்.  

முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்யுங்கள். கடைசி நாளான மஹாளய அமாவாசையன்று முன்னோருக்கு ஸ்ரார்தங்கள் செய்து பிராமணர்களுக்கு போஜனமளித்து ஆசி பெறுங்கள்.  

தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வாருங்கள் . அந்தணர்களுக்கு ஆடைகள்,  கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள்ன்னு"  பேப்பர்ல விளம்பரம் பண்ணிட்டான்.

14 நாளுக்கும்  என்னென்ன பலன்னு சொல்றான் பாருங்க. அங்க தான் இருக்கு அவன் சூட்சுமம்.

இன்னைக்குத்தான் ஆரம்பிக்குதாம்.

மஹாளய பக்ஷத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்: 

06-09-2017 முதல்நாள் - பிரதமை - பணம் சேரும் 
07-09-2017. 2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல் 
08-09-2017. 3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல் 
09-09-17 4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல் 
10-09-17 5ம் நாள் - பஞ்சமி மஹாபரணி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல் 
11-09-017 6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல் 
12-09-2017 7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் 
13-09-2017 8ம் நாள் - அஷ்டமி - மத்யாஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல் 
14-09-2017 9ம் நாள் - நவமி - வியதிபாத ஸ்ரார்தம் சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். 
15-09-2017 10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல் 
16-09-2017 11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி 
17-09-2017 12ம் நாள் - துவாதசி மற்றும் திரயோதசி- தங்கநகை சேர்தல்,பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில் 
18-09-2017 13ம்நாள் - சதுர்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை. 
19-09-2017 14ம்நாள் - மஹாளய அமாவாசை - மஹாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல். 


மக்களே திருந்துங்கள். புரட்டுக்களை நம்பாதீர்கள். 




l

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக