என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 22 மார்ச், 2011

மௌன முழக்கம்


 (துன்பப்பட்டோர், துயரப்பட்டோர், துரத்தப்பட்டோர், திசை மாறிச் சென்றோர் என அனைவரும் ஒருங்கிணைவோம் வாரீர்... என்று கருணாநிதி வைகோ அவர்களை நக்கல் செய்து விட்ட அறிக்கையின் எதிரொலி இக்கவிதை)

ஆணவப் பேயொன்று அரசமரம் உலுக்கினால்
ஆணிவேர் என்ன அசையவா போகிறது?
முதிர்ந்த பழமொன்று முறுவலித்து மகிழ்வதால்
முடிசூடும் நாளென்ன முடங்கவா போகிறது 

ட்டெறும்பு கூட்டமாக கல்லெடுத்து வீசுவதால்
காட்டாறு என்ன கலங்கவா போகிறது?
வஞ்சக மீனொன்று வாள்சுழற்றி அடிப்பதால்
நங்கூரம் என்ன நசுங்கவா போகிறது?

இலவசங்கள் கொடுப்பதால் இவர்வசத்தில் உள்ளவர்கள்
தலையெழுத்தைத் தமிழ்நாடு பார்க்கத்தான் போகிறது
வலக்கையில் சோனியாவும் இடக்கையில் குஷ்பூவோடும்
தமிழுணர்வு கொண்டதாக தம்பட்டம் அடிக்கின்றார்

துன்பப்பட்டோரே துரத்தப்பட்டோரே என்னிடம் வருகஎன
இருக்கையில் இருந்துகொண்டே இருகையைத் தூக்குகிறார்
கோபால புரத்திலிருந்து கொக்கரித்துச் சிரிக்கின்றார்
வீல்சேரில் உட்கார்ந்தே வில்லத்தனம் செய்கின்றார்

நஞ்சனைய வஞ்சகர்கள் நலிந்துவிட்ட நாட்டினிலே
நெஞ்சுரம் கொண்டோரின் நிறம்மாற்ற இயலாது
ஆனை கொழுத்தால் தலைமீது புழுதிதான்
அமைதி  காத்தவைக்கோ தலைமேலே கிரீடம்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக