என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 14 மே, 2011

வரவேற்பு சில அறிவுரைகளுடன்

வரவேற்பு சில அறிவுரைகளுடன்

வாழ்த்துக்கள்!

வெஞ்சூரியனை இலையால் மூடி
வெற்றி வாகை சூடிய வீரப்பெண்மணிக்கு!

அயராத உழைப்பு அறியமுடிகிறது!
அபார வெற்றியால்
நாடே அதிர்ந்துதான் இருக்கிறது


வெற்றிக்கு முழுக் காரணம்
மக்கள் மாற்று தலைமை
வேண்டியதேயன்றி  வேறில்லை

எல்லை மீறிய
குடும்ப அரசியல்  குடும்ப அராஜகம்
அனைத்துத்  துறையையும்  தன்வசப்படுத்தல் ....

இவற்றையெல்லாம் வெறுத்து
குடும்ப அரசியலைக்
கழுத்து நெறிக்கத்  தயாரானபோது
தேர்தல் மூலம் விரல்களை முடக்கிவிட்டு
இலைக்கு நீர் ஊற்றினர் 

அவர்கள் மக்களை  ஏ"மாற்ற" நலத்திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கையில் 
மக்கள் இவைரையே "மாற்ற" திட்டமிட்டிருந்ததை
இத்தேர்தல் உணர்த்திவிட்டது,
 
வாக்காளர்கள்  நடத்திய இந்தப்   பாடம்
சூரியனுக்கு மட்டுமல்ல
இலைமுரசுக்கும் சேர்த்துத்தான்

மிக்க கவனம் தேவை -

மக்கள் "இலவச"த்திலிருந்து -
"இலைவச"த்திற்கு   வந்திருக்கிறார்கள்

மகளைச் சேர்த்தவரை மாற்றியவர்கள்
தோழியைச் சேர்த்தால் துரத்திவிடுவார்கள்

புதிய எழுச்சியை  அறியவைத்துவிடனர்

ஆதலால்-
அகங்காரம் ஆணவம், பிடிவாதம்
சர்வாதிகாரம் சாஷ்டாங்க நமஸ்காரம்
இதையெல்லாம் விடுத்து

நட்புக்கு முக்கியத்துவம் அளிக்காது
நாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து
நல்லாட்சியை அமைத்தால் -

தொடர்ந்து தலைமைக் கிரீடம் தலையில் மிளிரும்.


அரியணை ஏறி நல்லாட்சி தொடங்க 

மீண்டும் வாழ்த்துக்கள்!

மீண்டுவந்து வெற்றியை எட்டியதற்கு!
மாண்டிடாது தமிழகத்தைக் காப்பதற்கு!

2 கருத்துகள்:

  1. மக்களை ஏ"மாற்ற"
    நலத்திட்டங்கள் தீட்டிக்கொண்டிருக்கையில்
    மக்கள் இவைரையே "மாற்ற" திட்டமிட்டிருந்ததை
    இத்தேர்தல் உணர்த்திவிட்டது,

    wow arumaiyaana varigal,, arivurai nnu sonnathu konjam migaiyaaga thonugirathu,,, atharkkaaga ungalukku urimaiyillai endru solla villai,,

    romba arumaiyaana karuthukkal,, thodarattum ungal eluthukkal..............

    பதிலளிநீக்கு
  2. வெற்றிக்கு முழுக் காரணம்
    மக்கள் மாற்று தலைமை
    வேண்டியதேயன்றி வேறில்லை

    100 % unmai,,,

    பதிலளிநீக்கு