எல்லாமும் எல்லோர்க்கும்
பிடிக்காதென்பது இயற்கை விதி
பழத்தை பறிக்கிறோம்
மரத்திற்கு வலி
பசுவிடம் கறக்கிறோம்
கன்றுக்கு பசி
ஒருவரின் தேவை
அடுத்தவற்கு வேதனை
கவிதையும் அப்படியே -
எல்லோரும் ரசித்தது
ஒருவருக்கு வலித்தது
எல்லோர்க்கும் வலித்தது
ஒருவருக்கு ரசித்தது
எங்கோ ஒருவர்
எப்படியோ பாதிக்கிறார்
பாதித்த கவிதையால்
பாதிக்கும் நட்பு
கடன் அன்பை முறிக்கும்
பழைய மொழி
கவிதையும் அன்பை முறிக்கும்
புது மொழி