என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 12 ஜூலை, 2011

வாழ்த்துக்கள் சாதிக்...

நல்லதொரு கவியாக நீ தமிழுலகில் அறியப்படவேண்டுமென்ற அக்கறை கொண்ட அன்புநிறை சகோதரியின் வாழ்த்துக்கள் உமக்கு எப்போதும் உரித்து ! 

18000 பதிவுகள் சேனைத் தமிழுலாவில் பதித்து சிறப்பான முன்னோடியாகத் திகழும் உனக்கு எனது பாராட்டுக்கள்!

பாராட்டும் அதனோடு சிறு பரிசுமாக இந்தக் கவிதையும் உமக்கே! 

பாதித்த பக்கங்கள் அத்தனையும் பிய்த்துதறி 
சாதிக்க வேண்டுமென்று எண்ணமொன்றே கொண்டு 
சாதிக்காய் மாறிபுது வேடமது பூண்டு - அவர்க்கு 
போதிக்கும் முறைகண்டு வியக்கின்றேன் யான்! 

முத்துப்போல் பதிவுகளை முனைப்பாக இட்டுதினம்
எத்திவிட்ட ஆயிரங்கள் பதினெட்டான இந்நந்நாளில்
நா"திக்கா"மல் அனைவரையும் வாழ்த்திடும் உனையென் 
நா"தித்திக்க" தித்திக்க வாழ்த்துகிறேன் மகிழ்ந்து!

உறங்காத சிந்தனைகள் ஒருகோடி சேர்த்து
சிறந்திடுவாய் சிறப்பான கோடிகவி யாத்து
உயர்வான இன்னும்பல உயரங்கள் தொடவே 
பிறர்போல வாழ்த்திடுவேன் அன்புடனே தினமே!

சேனைக்கு நீசெய்யும் சேவையினைக் கண்டுநான் 
வாயடைத்துப் போகின்றேன் வார்த்தையிலை சொல்ல 
வானைப்போல் சேனையது உயர்ந்துபுகழ் கொள்ள 
வாய்திறந்து வாழ்த்துகிறேன் வாடிடாது வளர்க்க! 


அன்புடன்,
யாதுமானவள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக