செங்கொடி ...
உயிரைக் காப்பதற்கு
உயிர் கொடுத்தாளாம்!
நீதி கேட்கிறாளாம்....
உடலை எரித்து உயிரை மாய்த்து!
பாவி மகளே...
உன்தாயின் பெற்றவயிறு எரிவதை
எதைக் கொண்டு அணைப்பது?
நான்குபேர் சேர்ந்து குரல் கொடுத்து
பெறவேண்டியது நீதி
நான்குபேர் உன்னைச் சுமைக்கவைப்பது
எந்தவிதத்தில் நீதி?
முட்டாள் தனத்திற்குத் தியாகி பட்டமா?
முப்புறமிருந்தும் மேளதாள வரவேற்பா?
உன் உயிரைப் போராயுதம் என்கிறார்கள்
அறிவற்ற செயல் எப்படி ஆயுதமாகும்??
உன் உயிர்மேல் அக்கறை இல்லாத உனக்கு
அடுத்தவன் உயிர்மேல் அப்படியென்ன அக்கறை?
உணர்ச்சி மேலீட்டால் முடிவெடுத்தாய்
உருக்குலைந்து போய்விட்டாய்
எரிந்து சாம்பலானது உன் மிச்சம்
ஒன்றோ இரண்டோ நினைவாண்டுகள்
உன்பெயரால் கொண்டாடப்படும் அவ்வளவே...
இருந்து போராடவேண்டியவர்கள்
இறந்து போகும் அவலம்
இதோடு நிறுத்துங்கள்...
நீதிகேட்டுப் போராட....
புலியை முறத்தால் அடித்து விரட்டிய
வீரத் தமிழச்சிகள் வேண்டும்!
***************
உயிரைக் காப்பதற்கு
உயிர் கொடுத்தாளாம்!
நீதி கேட்கிறாளாம்....
உடலை எரித்து உயிரை மாய்த்து!
பாவி மகளே...
உன்தாயின் பெற்றவயிறு எரிவதை
எதைக் கொண்டு அணைப்பது?
நான்குபேர் சேர்ந்து குரல் கொடுத்து
பெறவேண்டியது நீதி
நான்குபேர் உன்னைச் சுமைக்கவைப்பது
எந்தவிதத்தில் நீதி?
முட்டாள் தனத்திற்குத் தியாகி பட்டமா?
முப்புறமிருந்தும் மேளதாள வரவேற்பா?
உன் உயிரைப் போராயுதம் என்கிறார்கள்
அறிவற்ற செயல் எப்படி ஆயுதமாகும்??
உன் உயிர்மேல் அக்கறை இல்லாத உனக்கு
அடுத்தவன் உயிர்மேல் அப்படியென்ன அக்கறை?
உணர்ச்சி மேலீட்டால் முடிவெடுத்தாய்
உருக்குலைந்து போய்விட்டாய்
எரிந்து சாம்பலானது உன் மிச்சம்
ஒன்றோ இரண்டோ நினைவாண்டுகள்
உன்பெயரால் கொண்டாடப்படும் அவ்வளவே...
இருந்து போராடவேண்டியவர்கள்
இறந்து போகும் அவலம்
இதோடு நிறுத்துங்கள்...
நீதிகேட்டுப் போராட....
புலியை முறத்தால் அடித்து விரட்டிய
வீரத் தமிழச்சிகள் வேண்டும்!
***************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக