எத்தனையோ மொழிகளீன்ற தாயின் கருவிது
எதிரியையும் தன்வசத்தில் ஈர்த்து வைத்தது
சத்து நிறை நூல்களெல்லாம் தானும் கொண்டது
சந்ததமிழ் இன்றேனோ சவலை யானது
பத்திரமாய் பழைய நூல்கள் பரணில் உறங்குது
பார்க்கையிலே பழகுதமிழ் பாவம் வாடுது
சத்தியமாய் எனதுவிரல் தடுக்கத் துடிக்குது
சத்தமின்றி கவலைகொண்டு நெஞ்சம் நோகுது
எத்தர்மொழி ஏணிமேலே ஏறிப்போகுது
இதனைக் கண்ட என்மனமோ துக்கமாகுது
பித்தர்மனம் புத்திகெட்டு புறமே போகுது
போதைகொண்டு பிறமொழியை நாவிலேற்றுது
நித்தநித்தம் செந்தமிழின் நிலைமை மாறுது
நினைக்கையிலே நெஞ்சமெங் கும்தீ பரவுது
முத்தனைய மூத்ததமிழ் மூழ்கிப் போகுது
முழங்குமொழி யதற்குயின்று மூச்சு முட்டுது
சிலம்பொலியின் அதிர்வுகளை செவியில் ஏற்றியே
சிந்துவெளி முழுவதையும் உசுப்பி விட்டது
பலபுலவர் பகுத்து வைத்த சங்கநூலெலாம்
படித்தவர்கள் சிந்தையெலாம் செம்மையாக்குது
வெண்டளையால் உயர்ந்த குரள்வியக்க வைக்குது
வேறுமொழி தமிழைக்கொஞ் சம்இரவல் கேட்குது
ஒண்டமிழை உண்டவர்கள் நெஞ்சம் இனிக்குது
ஒர்நிகராம் தமிழை யுலகுகூர்ந்து நோக்குது
சூழநின்றும் ஆரியர்கள் சூழ்ச்சிசெய் தனர்பல
சூத்திரங்கள் செய்தபோதும் தோற்றுப் போயினர்
பாழும்ஆங் கிலேயன்வந் துதமிழைத்தாக் கினானவன்
பாதிரிமார் தமிழைத் தனது மார்பில் சூட்டினார்!
ஆழியலை யுண்டுதீர்க்க நினைத்து வந்தது
ஆரவார தமிழதற்கும் அடங்க மறுத்தது
தாழிஎல்லாம் நிறைந்து தரமுயர்ந்து நிற்குது
தரணியிலே உயர்ந்தமொழிப் பட்டம் வென்றது !
இன்னும்பல பெருமை களையிமையில் சுமக்கிறாள்!
இமயமான இவளையெந்தன் உதட்டில் சுமக்கிறேன்.
ஒன்றி யவள்நிழல்பி டித்து நானும் நடக்கிறேன்.
ஓடியவள் மடியில்தானே உறக்கம் கொள்கிறேன்
பொன்னும் மணிரத்தினங் களொதுக்கி வைக்கிறேன்
புன்னகையாய்ப் பைந்தமிழைப் பூட்டிக் கொள்கிறேன்
என்மழலை கோர்த்து வொருமாலை யாக்கினேன்
அதையிவளின் மார்பில் சூட்டியழகு பார்க்கிறேன்
- யாதுமானவள் (எ) லதாராணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக