
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் க்கு கேன்சர் நோய் பாதிப்பினால் அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்துக்கொண்டிருப்பதை உலகமே சோகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கையில், அவரை இவரிடம் அனுப்பினால் அவருக்கு யோகா சொல்லிகொடுத்து இந்த நோயை முற்றிலும் குணமாக்கிடுவேன்னு சொல்லி இருக்கார்.
இவரோட காமெடியெல்லாம் அரசியலோட நிறுத்திக்கிட்டார்ணா தப்பிச்சார். இல்லையென்றால் .... எந்த யோகா செஞ்சாலும் அவரை அவர் காப்பாத்திக்க முடியாது.... அப்படி ஆகிடும் அவர் நிலைமை.
ஏனென்றால் அரசியல் என்பது ஒரு சாரர் மட்டுமே சார்ந்தது. இங்கு இவர் உளறினால் ஒரு சாதகமான கட்சியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் . சிலர் எதிர்ப்பார்கள். அனால் நிறையப்பேர் "இவனுக்கு வேறே வேலை இல்லை" எனச் சொல்லிவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் விளையாட்டு என்பது ஜாதி மதம் , அரசியல், வயது , ஏழை பணக்காரன் என்ற எந்த வித்யாசமும் இல்லாமல் விளையாட்டு வீரர்களை தம் வீட்டு மக்களாகவே.. அனைவரும் எந்த விதமான வெறுப்புமின்றி நேசிக்கப்படுகிறவர்கள். அதனால் இதுபோன்ற விஷயங்களில் ரம்தேவ் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லைன்னா கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் மட்டையாலே போட்டு தாக்கிடுவாங்க .
ராம்தேவின் இந்த உளறலை என் மகனிடம் சொன்னேன். கேட்டுவிட்டுச் சொல்கிறான்...மம்மி... அவன் மட்டும் (ராம்தேவ்) எங்க பசங்க கிட்டே கிடைச்சான்ன... ஷிப்ட் போட்டு உதைப்போம். அவனால யோகவே பண்ண முடியாது அப்புறம்னு சொல்றானுங்க....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக