
செய்தி : பாபா ராம்தேவ் மீண்டும் உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார்... அதற்காக இது... ஹிஹி ...
அய்யோ பாவம் இந்த பாபா ராம் தேவ்; கரு
மைய்யைப் பூசியதை மறந்து விட்டா ராம்
கறுப்புப் பணம் லஞ்ச ஊழல் தடுப்பேனென்று
இந்தக் காவியுடை ஆசாமி விரதமும் இருந்தார் !
முறையான அனுமதி கிடைக்காதிருந்தும் இந்த
முறைகெட்ட ஆசாமி அதைத் தொடங்கி விட்டார்
நள்ளிரவில் காவலர்கள் தடுக்க வரப்;பயந்து
நாலு காலு பாய்ச்சலிலே குதித்துவிட்டார் !
தேடித்தேடிப் பார்த்தார்கள் காவல் காரர்
ஓடிப் போன ஆளை மட்டும் காணவில்லை
பேடிபோல பெண்ணொருவள் சுடிதார் கொண்டு
மூடிச்சென்று தப்பிவிட யத்த னித்தான்!
அப்படியும் விட்டிடாது பிடித்து அவனை
அடைத்து விட்டார்சில நாட்கள் சிறையினுள்ளே
அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றே
அங்குமொரு நாடகத்தைப் போட்டான் காவி !
அதற்குப் பின்தான் அன்னாரின் லீலைகலெல்லாம்
அம்பலத்தில் வந்ததுவே அடுக்க டுக்காய்
கறுப்புப் பணம் நிலமோசடி போன்ற குற்றம்
விறுவிறுப்பாய் செய்தவர்தான் இவரும் என்று
பொறுப்பாகத் துப்பறிந்து சொல்லி விட்டார்
இவர் லட்சணத்தை கண்டுகாரி துப்பி விட்டார்
இருந்தாலும் வெட்கத்தைத் துறந்து விட்டு
இன்னுமொரு விரதத்தை செய்வா ராமாம்
மேடைபோட்டு கூட்டம்கூட்டி வித்தை செய்யும்
இந்த ராமன் காட்டும் காமெடிக்கு அளவே இல்லை
அப்போது ஒரு பெண்ணோ சுடிதார் கொடுத்தார்
அடுத்ததாரோ ஜாக்கெட்டும் புடவையும் கொடுப்பார் ?
lol :)
பதிலளிநீக்குபாரதி....நல்ல பதிவு வாழ்த்துக்கள். இவரது சொத்து மதிப்பு (இவர் வெளியிட்ட அடிப்படையில்) 1100 கோடி ரூபாய்.
பதிலளிநீக்கு