காவிகள் செய்யும் லீலைக ளெல்லாம் கடலலை போலே தொடருது
பாவிகள் நாட்டைக் கெடுப்பது நமது கண்முன் நன்றாய்த் தெரியுது
ஆயினும் மக்கள் புத்தியு மேனோ அவர்பின் னாலே அலையுது
நோயினை ஒழிக்க மருந்திற்குப் பதிலாய் விஷமா நாமும் குடிப்பது?
பிரம்மச் சரியம் காக்கும் கலையை மேடை போட்டு நடத்துது
பிறர்மனை யாளை தள்ளிச் சென்று மேடை பின்னால் ஒளியுது
நடிகை யையெல்லாம் சீடர் களாக்கி நாய்போல் பின்னே அலையுது
கடவுள் பெயரைச் சொல்லி அங்கே காமக் கூத்து நடத்துது
நூற்றுக் கணக்காய் ஆசிர மங்கள் நாடு முழுதும் முளைக்குது
வேற்று நாட்டில் கிளைகள் கூட வேக மாகப் பரப்புது
கோடிக் கணக்கில் பணமோ இங்கு கிடுகிடு வென்றே குவியுது
ஓடியாடி உழைக்கா மல்தான் இவர்கள் உடம்பும் கொழுக்குது
பணிவிடை செய்ய பக்தை மட்டும் தனியாய் அறைக்குள் சென்றதையும்
முனிவன் போலே நடிப்பவன் அங்கே முறைகெட் டவனாய் நடந்ததையும்
பளிச்செனப் பிடித்த படங்க ளெல்லாம் தொலைக் காட்சியியே வந்ததையும்
தெளிவாய்ப் பார்த்தும் மக்கள் இன்னும் துதித்தே அவனைப் போற்றுகின்றார்
இத்தனை இழிந்த செயலைச் செய்தும் இன்னும் வெளியே சுற்றுகிறான்
உத்தமன் போலே வேடம் போட்டு ஊரை இன்னும் ஏய்க்கின்றான்
பணத்தின் பலத்தால் பக்தர்களோடு அரசாங்கத்தையும் அடக்கிவிட்டான்
கோடி ரூபாய் காலணி கொடுத்து ஆதீ னத்தையும் வாங்கிவிட்டான்
ஒழுக்கம் கெட்ட பிறவி யிவனே தகுதி யுடையான் எனச்சொல்லி
வழக்கமான முறைகளின்றி வாரிசு இவனே யெனக் கூறித்
தகுதியற்ற இவனின் தலையில் தங்கக் கிரீடம் அணிவித்து
மழுப்பும் பதிலை யேனோ மதுரை ஆதீ னந்தான் சொல்கின்றார்
வழக்கம் போல இந்தக் காவியும் எந்த வலையில் சிக்கியதோ
மழிக்காத் தலையன் இவனென் மகன்போல் அப்பன் நானென்றும்
பழிக்கு அஞ்சாப் புல்லர்கள் பதவியை பங்குபோட்டு மகிழ்வதை
விழிபிதுங்கிய நிலையில் நாமும் வேடிக்கை மட்டும் பார்க்கின்றோம்.
கண்களை மூடித் தியானம் செய்தால் கவலை ஒழியும் என்பவரைக்
கண்களை மூடி நம்பிச் செல்லுதல் முற்றும் மடமை என்ற றிந்து
மோசடிக் காவி கள்அத் தனைபே ரையும் நாட்டை விட்டே துரத்திவிட
யோசிக் காமல் இன்றே அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்படுவோம் !
எல்லோர் மனதில் உள்ள வருத்தம் இது . படம் பித்தார போல எழுதி இருக்கீர்கள் .தவறு செய்தவனுக்கு தண்டனை தான் கொடுக்கவேண்டும் அனால் இங்கு பதவி பிரமாணம் அல்லவா நடக்கிறது .
பதிலளிநீக்குநாளை இதுவே அனைவர்க்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்து , தவறை தைரியமாக செய்ய தூண்டும்.
உங்களின் சமூக அக்கறை உள்ள கவிதை நன்று
பதிலளிநீக்குஆனால் மக்கள் திருந்தினால் மட்டும் தான் இந்த போலி சாமியார்கள் குறைவார்கள்
மக்களே மனசு வையுங்கள் போலிகளை ஒழித்து கட்டுவோம்
உங்களின் சங்கடங்களை இறைவனிடம் முறையிடுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
நாம் இறைவனை தொடர்புகொள்ள இந்த இடைதரகர்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை புரிந்துகொள்ளுங்கள் மக்களே