வருடா வருடம் தேர்த் திருவிழா நடக்கிறது
பிரச்சனைகளுடனே தான் ஆரம்பிக்கும்....
ஊர்ப் பெரியவர்களுக்குள் பிரச்சனை -
முதல் மரியாதை யாருக்கு ?
யார் வீட்டுமுன் தேர் முதலில் நிற்க வேண்டுமு;?
யாருடைய பூசை முதலாவதாக இருக்க வேண்டும்?
அய்யர்களுக்குள் பிரச்சினை -
யார் ஆரத்தி எடுத்து பூசை செய்வது?
யார் விபூதி தட்டை பிடிப்பது?
யார் அம்மன் பாதத்தில் அமர்ந்து தட்சணைப் பணத்தைப் பாதுகாப்பது?
வியாபாரிகளுக்குள் பிரச்சனை -
பூக்கடை எங்கே வைப்பது?
டீக்கடை எங்கே வைப்பது?
பழக்கடை எங்கே வைப்பது?
கலைஞர்களுக்குள் பிரச்சினை -
கரகாட்டம் முதலா?
ஒயிலாட்டம் முதலா அல்லது
தப்பட்டை முதலா?
விடலைகளுக்குள் பிரச்சினை -
1000 வாலா வெடிப்பதா....
ஒத்த வெடி வெடிப்பதா அல்லது
ராக்கெட்டு விடுவதா?
வயதுப் பெண்களுக்கும் பிரச்சினை
தாவணி அணிவதா
பட்டுப் புடவை அணிவதா அல்லது
சுடிதார் அணிவதா
குழந்தைகளுக்கும் பிரச்சனை
அப்பாவுடன் செல்வதா
மாமாவுடன் செல்வதா அல்லது
அம்மா அனுப்பாமலே விட்டு விடுவாளா....
இப்படி.... ஒவ்வொருவரின்
யாருடைய பூசை முதலாவதாக இருக்க வேண்டும்?
அய்யர்களுக்குள் பிரச்சினை -
யார் ஆரத்தி எடுத்து பூசை செய்வது?
யார் விபூதி தட்டை பிடிப்பது?
யார் அம்மன் பாதத்தில் அமர்ந்து தட்சணைப் பணத்தைப் பாதுகாப்பது?
வியாபாரிகளுக்குள் பிரச்சனை -
பூக்கடை எங்கே வைப்பது?
டீக்கடை எங்கே வைப்பது?
பழக்கடை எங்கே வைப்பது?
கலைஞர்களுக்குள் பிரச்சினை -
கரகாட்டம் முதலா?
ஒயிலாட்டம் முதலா அல்லது
தப்பட்டை முதலா?
விடலைகளுக்குள் பிரச்சினை -
1000 வாலா வெடிப்பதா....
ஒத்த வெடி வெடிப்பதா அல்லது
ராக்கெட்டு விடுவதா?
வயதுப் பெண்களுக்கும் பிரச்சினை
தாவணி அணிவதா
பட்டுப் புடவை அணிவதா அல்லது
சுடிதார் அணிவதா
குழந்தைகளுக்கும் பிரச்சனை
அப்பாவுடன் செல்வதா
மாமாவுடன் செல்வதா அல்லது
அம்மா அனுப்பாமலே விட்டு விடுவாளா....
இப்படி.... ஒவ்வொருவரின்
சொந்தப் பிரச்சினைகளுடனே...
திருவிழாவும் தொடங்கிவிட்டது...
பெரிய வடம்...
அந்தப்பக்கம் 20 பேர் இந்தப் பக்கம் 20 பேர்
தேரிழுத்துத் தெருவில் போக
அச்சாணி முறிந்து அங்கேயே 20 பேர் பலி
முதல் மரியாதையிலும்
தட்சணைத் தட்டிலும் இருந்த கவனம்
தேர் செல்லும் பாதை சீராக இருக்கிறதா என
சிந்திக்கவே இல்லை.
குண்டும் குழியுமாக உள்ள சாலையில்
டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவன்
தள்ளாடிக் கொண்டே நடக்கலாம்
இருபது டன் எடையுள்ள தேரெப்படி ஓடும்?
யாருமே சொல்வதில்லை
சாலைகளைச் சீரமைக்காதது அரசாங்கத்தின் குற்றமென்று.. !
இப்போதும் சொல்கிறார்கள்..
அது தெய்வ குத்தமென்று!
திருவிழாவும் தொடங்கிவிட்டது...
பெரிய வடம்...
அந்தப்பக்கம் 20 பேர் இந்தப் பக்கம் 20 பேர்
தேரிழுத்துத் தெருவில் போக
அச்சாணி முறிந்து அங்கேயே 20 பேர் பலி
முதல் மரியாதையிலும்
தட்சணைத் தட்டிலும் இருந்த கவனம்
தேர் செல்லும் பாதை சீராக இருக்கிறதா என
சிந்திக்கவே இல்லை.
குண்டும் குழியுமாக உள்ள சாலையில்
டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வருபவன்
தள்ளாடிக் கொண்டே நடக்கலாம்
இருபது டன் எடையுள்ள தேரெப்படி ஓடும்?
யாருமே சொல்வதில்லை
சாலைகளைச் சீரமைக்காதது அரசாங்கத்தின் குற்றமென்று.. !
இப்போதும் சொல்கிறார்கள்..
அது தெய்வ குத்தமென்று!
பகுத்தறிவு சித்தாந்தம் பக்குவமாய் சொல்லும் பாங்கு மிக அருமை மற்றவர்களின் சிந்தனையை தூண்டுவதற்காக தந்தை பெரியாரைப்போல சிந்திக்கும் தங்களுக்கு என் புரட்சிகர வாழ்த்துக்கள்.நீங்கள் இதுபோன்ற சிந்தனையை தூண்டும் கட்டுரைகளை மேன்மேலும் எழுத வேண்டும்.நான் அதை இந்த தலைமுறைக்கு பரப்பவேண்டும்.இதுவே என் வேண்டுகோல்
பதிலளிநீக்குபகுத்தறிவு சித்தாந்தம் பக்குவமாய் சொல்லும் பாங்கு மிக அருமை மற்றவர்களின் சிந்தனையை தூண்டுவதற்காக தந்தை பெரியாரைப்போல சிந்திக்கும் தங்களுக்கு என் புரட்சிகர வாழ்த்துக்கள்.நீங்கள் இதுபோன்ற சிந்தனையை தூண்டும் கட்டுரைகளை மேன்மேலும் எழுத வேண்டும்.நான் அதை இந்த தலைமுறைக்கு பரப்பவேண்டும்.இதுவே என் வேண்டுகோல்
பதிலளிநீக்கு