காஞ்சி "காம"கோடி பீடாதிபதிகளெல்லாம் ... எப்போது உத்தமர் ஆனார்களோ தெரியவில்லை... எழுத்தாளர் அனுராதா ரமணன் கொடுத்த புகாரையும் மக்கள் மறக்கவில்லை... சொர்ணமால்யா விஜயேந்திரர் விவகாரத்தையும் மறக்கவில்லை... சங்கர் ராமன் கொலை வழக்கில் இன்னும் நீதிமன்றத்துக்கும் காஞ்சி மடத்துக்குமாக நடந்து கொண்டிருப்பதும் முடியவில்லை.... வட தமிழகத்துக் கேவலம் இன்னும் சந்தி சிரித்துக்கொண்டிருக்கையில் ...
தென்தமிழகத்து ஆதீனம் பயித்தியம் பிடித்துவிட்டதுபோல் திடீரென்று சன்டிவி புகழ் நித்யானந்தாவின் தலையில் தங்கக் கிரீடம் சூட்டிவிட்டு... அப்பனும் மகனும் போல நாங்க மதுரை மீனாட்சியை (அட கோவிலைத் தாங்க) மீட்கப்போறோம்னு சொல்ல... நடிகையோட படுக்கையைப் பகிர்ந்தவனுக்கு மதுரை ஆதீனத்தை எப்படி பகிர்ந்து கொடுக்கலாம்னு ஆளாளுக்கு கொந்தளிச்சு எழ.. நான் மட்டுமா அப்படி? காவி கட்டின எல்லாருமே ஒரே மாதிரிதானே என்கிற ரேஞ் ல எல்லா ஆதீனத்தின் பள்ளி அறையிலயும் 24 மணி நேரம் கேமரா வச்சா நாங்கல்லாம் ஆன்மீ"காம"வாதிகள்னு எல்லாருக்கும் புரிஞ்சுடுமே... எல்லோருமே இந்த தகுதியோடதானே காவி கட்டியிருக்கோம்னு நித்தி "ஆ" நந்தா சொல்ல...
இந்தியாவில இருக்கும் அத்தனை இந்து அமைப்புகளும், பத்திரிகைகளும் பப்ளிக்கும் டென்ஷன் ஆகி ஆளாளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க.... சரி இதைஎல்லாம் அவங்க டீல் பண்ணிக்கட்டும்... நாம எப்பவும் போல மடத்துல பூஜை பண்ணமா... தட்டுல காசு வாங்கினமா.... நெய் சோறும் பாலும் பழமும் சாப்பிட்டு தூங்கினோமான்னு இல்லாம ... "நுணலும் தான் வாயால் கெடும்" ங்கறமாதிரி ... நித்யானந்தா தலைய மொட்டை அடிக்காம முடிய" வச்சி"கிட்டிருக்கார்னு .. ரஞ்சிதாவை கிட்டவே " வச்சி"கிட்டிருக்கார்னு இந்த ஆன்மீ"காம" சங்கராச்சாரியார் சொல்ல....
"சமுதாயத்துல நல்ல பே(ர்)ரோட வாழ்ந்துகிட்டிருக்கற ரஞ்சிதா இப்போ மன
உளைச்சளுக்கு ஆளாகிட்டங்களாமாம்..... அதனால மான நஷ்ட வழக்கு போட இன்னைக்கு
கோர்ட்டுக்குப் போனாங்களாமாம்.... சொன்ன பேச்சை வாபஸ் வாங்க
சங்கராச்சாரியாருக்கு நித்தி பத்து நாள் கெடு கொடுத்திருக்காறாமாம். ... இப்படி ஒவ்வொருத்தரும் ஏதாவது ஒரு காமெடி பண்ணி தினம் ஒரு கூத்துனு ஏகப்பட்ட கூத்து தினம் தினம் நடந்துகிட்டிருக்க ...
"லிப்ட் ல மாட்டிகிட்ட என்னை ஓங்கி உதைச்சு (லிப்டை தான)
திறந்து நித்யாதான் என் உயிரை காப்பாத்தினார்னு மதுரை ஆதீனம் இன்னைக்கு
புது ஜோக் ரிலீஸ் பண்ணி இருக்காரு. கனவுல வந்து நித்ய னந்தத்தை
அடையாளம் காட்டின சிவன் பார்வதி... லிப்ட் ல ஏன் வரலைன்னு யாருமே கேட்கலே.
... எதுக்கு லிப்டை காலால உதைச்சு தொறக்கனும்... மந்திரம் சொன்னாலே
திறக்காதான்னும் யாருமே கேட்கலே....
ஆனா ஒன்னுமட்டும் தமிழ் நாட்டில பேசிக்கறாங்களாம்.... "கத்திரி வெயிலை கூட சமாளிச்சுடுவோம்... ஆனா இந்த நித்தி பயலை சமாளிக்க முடியல... "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக