என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 17 அக்டோபர், 2013

தீ..தீ...தீபாவளி...தீ ...




ஒரு வழியாக நவராத்திரி கொண்டாட்டம் ஓய்ந்து வச்ச "கொலு" எல்லாம் எடுத்து "பய"பக்தியா  யார் கண்ணுலயும் படாம மறைச்சு வச்சுட்டு ஆயுத பூஜை சரஸ்வதி பூஜையெல்லாம் கொண்டாடிட்டு இப்போ தீபாவளிக்கு ரெடி ஆகிட்டாங்க "இந்து" க்ள் ஆன தமிழர்கள்.

தைப்பொங்கல் தான் தமிழர்கள் பண்டிகை இதெல்லாம்விந்திய மலைக்கு அந்தப் பக்கமாக சொந்தமா தனக்குன்னு ஒரு நாடில்லாமல்  நாடோடிகளா திரிஞ்சுகிட்டு  நம்ம நாட்டுக்குள்ள புகுந்து இந்துக்களாக நாமம் சூட்டிகிட்டு திராவிடர்களுக்கும் "இந்து" என்று பெரிய(பெயரை) நாமம் போட்ட  வடநாட்டவர்கள் பண்டிகைன்னா கேட்கவா போகிறார்கள் நாம இந்துக்களே இல்லை என்று தெரியாத தமிழர்கள்? 

பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடும்போது பத்திரம்......,ஆர்வக்கோளாரில் வாயில் பட்டாசு வச்சு வெடிச்சுக்கப் போறீங்க தமிழர்களே. அப்புறம் சாப்பிடவும் முடியாது சண்டை போடவும் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக