என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 19 அக்டோபர், 2013

புரட்டு+ஆசி + மாதம் = புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் நம்ம பக்தர்களைப் படுத்தும் பாடு இருக்கே அப்பப்பா...யார் ஆரம்பித்து வைத்ததோ தெரியவில்லை புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடக் கூடாதென்னும் "அற்புத"ஒழுக்கத்தை.

புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே தொடங்கி விடுகிறது இந்த அற்புத ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களின் தவிப்புகள்.

ஐயோ... நாளைக்கு புரட்டாசி மாதம் தொடங்கிவிடுகிறது. இந்த ஒரு மாதம் முழுக்க அசைவம் சாப்பிடக் கூடாது. அதனால் இன்னைக்கு பிரியாணி ஒரு கட்டு கட்டிடலாம்... என்பதில் ஆரம்பித்து...எங்க  வீட்ல முதல் "சனி"யே கும்பிட்டுடுவோம். அதனால அடுத்த நாளில் இருந்து நாங்க "கவுச்சி" சாப்பிடுவோம் என்கிறவர்களும்.... ஐயோ எங்க பரம்பரை பழக்கம் 4ஆவது "சனி" கும்பிடறதுதான். ஹ்ம்...அதுவரைக்கும் வாயைக் கட்டணுமே என்று அங்கலாயத்தும்... எங்க மாமியார் இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்காங்க... புரட்டாசி முடிஞ்சாலும் அஞ்சாவது "சனி" வரைக்கும் முட்டை கூட சாப்பிட விடமாட்டாங்க என்று மாமியாரை சபிப்பதும்....அடடா..  அந்த மாதம் முழுவதும்அவர்கள் கனவிலும் நினைவிலும் மீனும் கோழியுமாகவே திரிவதைப் பாத்தால் .... ஐயோ பாவம் பக்தர்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இன்னும் ஒரு சிலர்... ஆஹா.... இன்னையோடு முடிஞ்சதுடா புரட்டாசி "சனி" என்று Birthday கொண்டாடுவது போல மட்டன் வறுவல்,  சிக்கன் மசாலா, நண்டு,
மீன் என்று கண்முன்னாடி எல்லா "அயிட்டங்களையும்"வைத்துவிட்டு  ராத்திரி பன்னிரண்டு மணி எப்படா அடிக்கும்னு... கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே... பன்னிரண்டு ஆனவுடனே ஒரே..."அட்டாக்" தான்.

இதற்குப் பெயர்தான் ஆன்மீகத் துன்புறுத்தலோ? இப்படி  யாரைய்யா உங்களை துன்பப்பட சொல்றது? புரட்டாசி மாதம் மீன் சாப்பிட்டால் செரிக்காதா? மட்டன் சாப்பிட்டால் வயத்துக்குள்ள இறங்காதா? இல்லை எலும்பு கடித்தால் பல்லு கோவிச்சுக்குமா? அடுத்த வருஷம் சாப்பிட்டு பாருங்க ஒண்ணும் ஆகாது.

இதுமட்டுமா ? இன்னுமொரு வழக்கமும் நம்ம மகா பக்தர்களிடம் உண்டு. பெருமாளுக்கு தலைமுடி அர்ப்பணிக்கிறார்களாம். யாருடைய  கனவில் வந்து பெருமாள் தலைமுடியை தானமாகக் கேட்டாரோ தெரியவில்லை... இந்தியாவின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் பக்தர்கள் ஏழுமலையைத் தாண்டி வந்து"முடிய" காணிக்கை செலுத்துகிறார்கள். (முடியலடா சாமி )

அவர் மட்டும் தலைக்கு வைரக் கிரீடம் போட்டுகிட்டு  பக்தர்களுக்கு மொட்டையா?  நல்லா இருக்குப்பா இந்த டீலிங்....இன்னும் எவ்வளவு நாளைக்குய்யா இந்த கூத்தெல்லம் நடக்கும்?  இனியாவது யோசிச்சுப் பாருங்க.

முட்டாளகளைத் திருத்திடலாம் ஆனால் படிச்ச முட்டாள்களைத் திருத்துவதுதான் இந்தக் காலத்தில்  மிகவும் கஷ்டம். ஏனென்றால் இவர்களெல்லாம்"சாதா"முட்டாள்களல்ல"ஸ்பெஷல்"முட்டாள்கள்.

எப்படி சொல்லி புரியவைப்பது? ..முடிதானே அங்க போகணும்?.அதுக்கு  ஒரு நல்ல "நாவிதரைக் " கூப்பிட்டு தலையை மழிச்சு... ஒரு முடி விடாம அப்படியே எடுத்து"கொரியர்ல" திருப்பதிக்கு  பார்சல் அனுப்பிடுங்க. பிரசாதத்தை (லட்டு)  Door Delivery அனுப்ப  சொல்லுங்க .  போக்குவரத்து செலவு மிச்சம், அலைச்சல் மிச்சம். நாவிதர்க்கு நாற்பது ரூபாயும் கொரியருக்கு 60 ரூபாயும் மொத்தம் நூறு ரூபாய்க்குள்ள  வேலையும் முடியும்.

ஐயோ குய்யோ ன்னு கத்தாதீங்க."அபிஷ்டு"ன்னு திட்டாதீங்க
திருப்பதில இருந்து "பிரசாதம்" அதாங்க லட்டு பார்சல்ல வர ஆரம்பிச்சு வருஷக் கணக்கா ஆகிடுச்சிங்கற  விஷயம் நமக்கும் தெரியும்.  காணிக்கைய மட்டும் பார்சல் ல அனுப்பினா என்ன தப்புன்னு கேட்கறேன். காணிக்கையை credit card ல accept பண்ணும்போது Courrier  ல accept பண்ணக்கூடாதா என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக