சச்சின் டெண்டுல்கருக்கு "பாரத் ரத்னா" விருது கொடுத்ததன் மூலம் அந்த விருதின் மதிப்பே உயர்ந்து விட்டது. அது தான்... தற்போது இவருக்கு என் கொடுக்கவில்லை அவருக்கு ஏன் கொடுக்க வில்லை என்று தில்லி முதல் தமிழ் நாடு ஆந்திரா என்று எல்லோரும் அலறிக்கொண்டு இருக்கின்றனர்.
சிலரைக் குறிப்பிட்டு இவருக்கு ஏன் பாரத் ரத்னா விருது கொடுக்க வில்லை என்று கேட்பவர்களைக்கூட சகித்துக் கொள்ளாலாம் ஆனால் சச்சினுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவருக்கு ஏன் இந்த விருது கொடுக்க வேண்டும்? பணம் வாங்கிக்கொண்டுதானே விளையாடினார். விளையாட்டிற்கு கோடியில் சம்பளம் வாங்கிக்கொண்டுதானே விளையாடினார். BCCI என்பது ஒரு தனியார் நிறுவனம் தானே அதற்காகத்தானே ஆடினார்? அதற்கும் நம் அரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி வேறு.
இந்தி சினிமா பாடகி லதா மங்கேஷ்கர், MS சுப்புலட்சுமி இவர்களெல்லாம் என்ன இந்திய அரசவைப் பாடகார்களா என்ன? இவர்களும் பணம் வாங்கிக்கொண்டு பாடியவர்கள் தானே? அவர்களுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கும்போது இந்தக் கேள்வியை ஏன் யாரும் கேட்கவில்லை? அப்போது தெரியவில்லையா இவர்களை விட சிறந்த எத்தனையோ பேர் இந்தியாவிற்காக தொண்டு செய்தவர்கள் இருக்கிறார்களென்று? உண்மையாகச் சொல்வதென்றால் லதா மங்கேஷ்கர் பாடல்கள் இந்தியாவில் 25 சதவீதம் கூட புரிய வாய்ப்பில்லை. அது போலவே கர்நாடக சங்கீதமும். ஆனால் சச்சின் அப்படியல்ல, கிரிகெட்டால் உலகையே கவர்ந்தவர்.
இந்தியாவின் அடையாளமாகவே திகழ்பவர்.
லதா மங்கேஷ்கர், MSS ,MGR , Rajiv என்று இன்னும் எத்தனையோ பாரத் ரத்னாக்கள் விருதுக்குத் தகுதியானவர்கள் என்னும்போது "பாரத் ரத்னா" சச்சின் டெண்டுல்கர் இவர்கள் எல்லோரையும் விட பல மடங்கு தகுதியானவரே. சச்சின் உலக சாதனையாளர். கிரிக்கெட் வரலாற்றில் எத்தனையோ சாதனைகளை முறியடித்தும் புதிய புதிய சாதனைகளை உலக விளையாட்டு சாதனை புத்தகத்தில் சேர்த்துக்கொண்டும் 24 வருடங்களை சாதனைகளாலேயே நிரப்பியிருக்கிறாரே இவரை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவே முடியாது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, ஹாக்கி வீரர் த்யான் சந் இருவரும் பாரத் ரத்னா விருதிற்கு முற்றிலும் தகுதியானவர்களே. இவர்களுக்கு இவ்விருது கொடுக்க வேண்டுமென்று இத்தனை நாட்கள் யாருக்குமே தோன்றாமல்இப்போது ஆர்ப்பரிப்பது ஏன் என்பதுதான் வேடிக்கை. இதுவரை ஒரு விருதாக மட்டுமே இருந்த பாரத் ரத்னா சச்சினை அடைந்ததன் மூலம் இன்னும் உயர்ந்ததாக பெருமை மிகுந்த விருதாக மாறிவிட்டது என்பதே உண்மை. அதனால் தான் இத்தனை கபளிகரங்கள் நடக்கிறது.
எப்படியோ போகட்டும்... சச்சினால் பாரத் ரத்தினா விருதிற்கு ஒரு புதுப் பொலிவு கிடைத்து விட்டது. பெருமைப் படுங்கள். ஏனென்றால்.... இதுதான் சச்சின்.
சச்சின்.... சச்சின்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக