மூலையில் குப்பை சேர்த்தால் அகற்றி விடுகிறார்களே... மூளையில் சேரும் குப்பைகளை ஏன் அகற்ற மறுக்கிறார்கள்? - பெரியார்
இன்றைக்கு ஆயுத பூஜை.
என்ன தொழில் செய்கிறார்களோ அந்த தொழிலுக்கு உபயோகப்படும் அத்தனை கருவிகளையும் சுத்தம் செய்து அவைகளுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அன்றைக்கு தொழிலுக்கு விடுமுறை கொடுத்து அந்த கருவிகளுக்குப் பூஜை செய்தால் தான் தொழில் விருத்தி அடையுமாம் - சரி, சமையல் செய்யும் பாத்திரங்களுக்கு ஓய்வு கொடுத்து இன்னைக்கு பட்டினி கிடக்க வேண்டியது தானே? அதுவும் பெண்கள் தினம் உபயோகிக்கும் கருவிகள் தானே என்று கேட்டால் சும்மா விடுவார்களா? அல்லது இருதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் இன்று என்னோட instruments கு விடுமுறை அதனால் இன்னைக்கு ஆபரேஷன் செய்ய முடியாது என்று சொன்னால் நன்றாக இருக்குமா?
எல்லோரும் புத்தகத்திற்கு குங்குமப் பொட்டு வைத்து பூஜை செய்கிறார்கள். ஏனென்று கேட்டால் அப்போதுதான் அறிவு வளருமாம். நன்றாகப் படிப்பார்களாம். புத்தகத்தைப் படித்தால் தான் அறிவு வளரும். அதற்குப் பொட்டு வைத்தாலும் அறிவு வளருமா என்று ஒரு நிமிடம் கூடவா யோசிக்க மாட்டார்கள்?
இப்போதெல்லாம் கம்ப்யூடரிலே படிக்கிறார்களாம். அதனால் கம்ப்யூடருக்கு மஞ்சள் குங்குமம்...ஏன்னா பேஸ் "புக்" இருக்காம்---- .அடப்பாவிகளா நீங்களெல்லாம் படிச்சும் பிரயோஜனமில்லாமல் போகுதே.
இன்னும் ஒரு படி மேலே போய் சில பேர் ஐ-பேட், மொபைல் போனுக்கும் பொட்டு வச்சு பூஜை செய்கிறார்கள் -ஏன்னா அது ஒரு மினி கம்ப்யூட்டராம் ---- ஸ்டீவ் ஜாப்ஸ் இறந்துவிட்டாரே என்று வேதனைப்பட்ட நான் இன்று சந்தோஷப் படுகிறேன்..
இதைச் சொல்வதால்... ஆஹா... என்னோட மத நம்பிக்கையை இழிவு படுத்துகிறார் என்று ஒரு கூட்டம் கிளம்பும்....
அவர்களுக்கு மட்டும் இது: நான் படித்தால் எனக்கு அறிவு வளரும்... அதைக்கொண்டு என்னால் புதிய கருவிகள் / கண்டுபிடிப்புகள் செய்ய முடியும்" என்று சொன்னால் இது நம்பிக்கை.
நான் புத்தகங்களுக்கும் கருவிகளுக்கும் பொட்டு வைத்து பூஜிக்கிறேன்.. அதனால் எனக்கு அறிவும் தொழிலும் பெருகும்" என்று சொல்வது மூட நம்பிக்கை.
மூடத்தனமான இந்த பழக்கங்களிலிருந்து மெல்ல விடுபடவேண்டும் என்று தான் சொல்கிறேன்.
ஆயுதங்களுக்குப் பூஜை செய்வதை விட்டுவிட்டு... புதிதாக ஆயுதங்கள் செய்ய முயற்சி செய்யுங்கன்னு இனிவரும் தலைமுறையை ஊக்குவித்தால் நன்றாக இருக்கும் என்றுதான் சொல்கிறேன்.
இதை விட்டுட்டு ...தலைமுறை தலைமுறையாக இப்படியே எவனோ கண்டுபிடித்த பொருட்கள்/ கருவிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்து கொண்டே தமிழன் இருதால்; ஆயுத பூஜை என்ற Concept இல்லாத அறிவாளிகள் எப்போதும் போல் புதிது புதிதாக கருவிகள் கண்டு பிடித்துக்கொண்டே இருப்பார்கள். பிறகு அதையெல்லாம் ஒன்பது நாட்களுக்கு படிக்கட்டில் கொலுவாக வைத்து மஞ்சள் குங்குமம் இட்டு பார்த்துக்கொண்டே செத்து மடிய வேண்டியதுதான்.
(நீங்களும் தானே ஆயுத பூஜையெல்லாம் கும்பிட்டுக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்பவர்களுக்கு : என் அம்மா வீட்டில் கொண்டாடினார்கள்... சிறுவயதில் நாமும் அந்த பழக்கங்களோடே வளர்க்கப்பட்டோம். அப்போதே எதிர்கேள்விகள் ஆயிரம் கேட்போம். இவையெல்லாம் ஏமாற்றுவேலை என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிந்தவுடன் விட்டுவிட்டோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக