Dr. சாந்தா (Medicine Oncology - Adyar Cancer Hospital ) அவர்களுக்கு கான்சர் நோயாளிகளை குணப்படுத்தும் அருந்தொண்டு செய்துகொண்டிருப்பதற்காக 2016 ஆம் ஆண்டின் பத்மவிபூஷன் விருது அறிவித்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.
ஆனால் இதற்கு நேர்மாறாக அய்யா ரஜினி அவர்களுக்கும் இந்த விருது.
நானும் 5 மணி நேரத்திற்கும் மேல் யோசித்து யோசித்துப் பார்த்தேன் ரஜினிகாந்திற்கு எதற்காக பத்மவிபூஷன் பட்டமென்று..
பிறகு தான் புரிந்தது 1975 ஆம் ஆண்டிலிருந்து (அபூர்வராகங்கள்) தமிழ் நாட்டு ஆண்களுக்கு விதவிதமாக சிகிரெட் பிடிக்க கற்றுக் கொடுத்து பாதிபேரை கான்சர் நோயாளிகளாக்கினாரே இந்த உயரிய சேவைக்காக இருக்கும் என்பது .
So, சேவை செய்தும் விருது வாங்கலாம். சேவை செய்ய தூண்டுகோலாக இருந்தாலும் விருது வாங்கலாம். வாழ்க பாரதம்.!!
(இதைப் படிக்கும் யாருக்கும் சிரிப்பு வரக்கூடாது. அப்படி சிரித்தால் ரஜினி ரசிகர்கள் டென்ஷன் ஆகிடுவார்கள். அப்புறம் டென்ஷன் குறைக்க இன்னும் நாலு சிகெரெட் எக்ஸ்ட்ரா குடிப்பார்கள்.. அப்புறம் அடுத்த வருஷம் "பாரத் ரத்னா' விருது வாங்க இதுவே காரணமா ஆகிடும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக