என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

செவ்வாய், 29 மார்ச், 2016

புத்தகங்கள் என்பது புதையல் தான்...

பெரியோர்களுடன்  உரையாடுவது  எப்போதும் எனக்குப் பிடிக்கும்.  நலம் விசாரிப்புக்காக ஒரு சில நிமிடங்கள் பேசினாலும் அந்த சில நிமிடங்களுக்குள் நமக்குத் தெரியாத ஆனால் தேவையான தகவல்கள் அவர்களிடமிருந்து கிடைத்துவிடும்.

மார்ச் 8 ஆம் தேதி சென்னையில் ICSA அரங்கில் மகளிர் தின கருத்தரங்கிற்கு பேராசிரியர் சுப. வீரபாண்டியவர்கள் அழைப்பின் பேரில் சென்றிருந்தேன்.  பேராசிரியரின் அருமையான உரையை கேட்டு மகிழ்ந்தேன். அன்று அய்யா அவர்கள் அன்றைய காலத்தில் பெண்களின் நிலை பற்றி நிறைய கருத்துக்கள் கூறினார் அப்போது இன்னும் தெளிவாகத் தெரியவேண்டுமெனால் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பெண் மானம் என்ற நூலில் எழுதியுள்ளார் அதைப்படியுங்கள் என்று கூறினார். அந்த புத்தகத்தைத்  தேடிக்கொண்டிருந்தபோது  ...


திருநெல்வேலி அய்யா காசி அவர்களிடம் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய "பெண் மானம் " என்ற நூல் உள்ளதா எனக் கேட்க வேதநாயகம் பிள்ளை அவர்களைப் பற்றி சிறிது நேரம் பேச நேர்ந்தது. நான் அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி போன்ற அருமையான சில நூல்களை  ஏற்கனவே வாசித்துள்ளேன் எனக் கூறினேன்.

அப்போது திரு  காசி அய்யா சொன்னது ஆமாம் அம்மா நானும் கேள்விப்பட்டிருகிறேன்... வேதநாயகம் பிள்ளை அவர்களின் நூல்களைப்பற்றி மற்றவர்கள் பெருமையோடு பேசுவதை என்று கூறி  "இன்னது தெரியாவிட்டால்  மாயவரம் வாரும் இசை  வேதநாயகம் நீதி நூலைப் பாரும்" என்று ஒரு புலவர் இவரைக் குறித்து பாடி இருக்கிறார் இதை இபோதும் வழக்குச் சொல்லாகவே  சிலர் சொல்வார்கள் என்றார்.

கேட்டபோது அடடா என்று தோன்றியது.... இப்போது வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய "பெண் மானம்" மற்றும் "நீதி நூல்" இரண்டு புத்தகங்களுமே படிக்க வேண்டும்என்ற எண்ணம் தோன்றியது ....  நீதி நூல் மூலமும் அதன் உரையும் முன்பே படித்திருப்பினும் பிள்ளை அவர்கள் எழுத்துவழியையும் படிக்கும் ஆவலைத் துண்டிவிட்டுள்ளது

புத்தகங்கள் என்பது புதையல் என்பது உண்மைதான்... ஆம்.. நாம் ஒன்றைத் தேடிச்செல்ல அது இன்னொன்றை நமக்கு அடையாளம் காட்டிவிட்டுச் செல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக