"தமிழகத்தில் தனிப் புகழுடன் விளங்கிய அந்தப் பாவேந்தருடைய பார்வையே ஒரு கவிதை! பேச்சே காவியம்! அவருடன் உரையாடினால் இன்னும் தமிழின் மாண்பினை உணரலாம்" - என்று புரட்சிக் கவிஞர் பாரதி தாசனைப் பற்றி அறிஞர் அண்ணா மொழிப்போராட்டத்தின்போது (1964) தன்னுடைய சிறைக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
இன்றைய கவிஞர்களைப் போல் இருவரி எழுதிவிட்டு இறுமாப்பு கொள்கிறவர்களல்ல அன்றைய கவிஞர்கள். தமிழ் உணர்வு குருதியொடு கலந்து கொப்புளித்தவண்ணமே வாழ்நாள் முழுவதும் இருந்தவர்கள். அதனால் தான் இன்னும் / இன்றும் நம்முடனே இருக்கிறார்கள். நாட்டு நலனுக்காகவே பாடல்களை எழுதினார்கள். வீரமும் விவேகமும் அறிவும் தெளிவும் என அனைத்தும் அடங்கியாதாக ஒவ்வொரு வரிகளையும் நமக்கென வார்த்துத் தந்தனர்.
தந்தை பெரியார், பேரரிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - இந்த முப்பெரும் தலைவர்களைப் பெற்ற தமிழகம் உண்மையிலேயே புகழ்மிக்கது.
பக்திப் பாடல்களை தன ஆரம்ப காலத்தில் எழுதிக்கொண்டிருந்த பாரதிதாசன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் பக்குவப்பட்ட பின்பே அறியாமையில் உழன்று கொண்டிருந்த மக்களைக் குறித்து அதிகம் கவலைப்பட்டார் . அவர்களையெல்லாம் நல்வழிப்படுத்த கல்வியே சிறந்த வழியென்று உணர்ந்ததால் தான் அவரால் ...
"யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில்
யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும் " என்று உரத்துச் சொல்ல முடிந்தது ..
உடையார் என்பவர் கல்வி உடையாரே - என்றும்,
ஒவ்வொரு மனிதனும் கல்வி கற்றே ஆகவேண்டும் என்று கூறிக்கொண்டே இன்னும் ஒரு படி மேலே
"கல்வியில்லாப் பெண்டிர் களர்நிலம் ; அந்நிலத்தில்
புல் விளையலாம் நல்ல புதல்வர்கள் விளைவதில்லை"
என்று பொட்டில் அடித்தாற்போல் போல் பெண்கல்வியின் அவசியத்தைக் கூறினார். அவருடைய பாடல்கள் பெரும்பாலும் முரட்டு வார்த்தைகளால் நிரம்பியிருந்தாலும் அதில் ததும்பி நிற்கும் உண்மையின் வேகமும் உள்ளத்தின் உணர்ச்சியும் உள்ளபடியே நம்மைச் சிலிர்க்க வைக்கும்.
இவர் ஆரியப் புரட்டுக்களையெல்லாம் தன்னுடைய புரட்சிப் பாடல்களால் புரட்டிப் போட்டுள்ளார். உதாரணமாக ஒன்று. "அகத்தியன் விட்ட புதுக் கரடி" என்ற தலைப்பில் எழுதியிருப்பார்.
அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப்
புகுத்தினான் செந்தமிழ்ப் பொன்னாடதனில்
அன்று பிறந்தது "குள்ளனை அணுவும் நம்பாதே என்ற பழமொழி"
பழைய திராவிடம் செழுமை மிக்கது
வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது
செந்தமிழ் இலக்கணச் சிறப்புற்றிருந்தது
வையக வாணிபம் மாட்சி பெற்றிருந்தது
ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும்
திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர்
இராத தொன்றில்லை திராவிட நாட்டில்
இந்த நிலையில் வந்தான் அகத்தியன் .
என்ற பாடலில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய தமிழர்களிடம் ஆரியப் பார்ப்பனர்கள் மூட நம்பிக்கைகளை எப்படியெல்லாம் விதைத்தனர் என்று நயம்பட உரைத்திருப்பார் . படிகும்போது சி
ரிப்பு
வரவழைக்கும் ஆனால் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் மிகச்சிறந்த படைப்பு இது என்பதே உண்மை .
இதுமட்டுமல்ல ....
புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள்உ டம்பு!
சதிராடும் நடையாள் அல்லள் தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம்அ வட்கு வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்? "இருக்கின்றாள்" என்ப தொன்றே
-- என இதைவிட சிறந்ததாய் முதியோர் காதலைப் பற்றி எவரால் கூறிட இயலும்?
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல் ... இராமாயணத்திற்குப் பின் எட்டு நுற்றாண்டு களாகக் காவியங்கள் ஏதும் படைக்கப்படவில்லை என்ற குறையிருந்த காலத்தில் "இராவண காவியம்" என்ற அரியதோர் காவியத்தை புலவர். குழந்தை அவர்கள் எழுதிடத் தூண்டுதலாய் இருந்தது புரட்சிக் கவியவர்கள் எழுதிய
"தென்திசையைப் பார்கின்றேன் என்சொல்வேன்...
என் சிந்தையெலாம் தோள்களெலாம் பூரிக்குதடடா "
அன்றந்த இலங்கையினை ஆண்ட மறத் தமிழன் .... என்ற அந்த வரிகள் தானே.
பேரறிஞர் அண்ணா கூறியது போல தமிழகத்தில் தனிப்பெரும் புகழுடன் விளங்கிய பாவேந்தர் பிறந்த நாளைப் போற்றுவோம். வியத்தகு வண்ணம் பற்பல பாவியற்றி நம்மை இன்றும் ஆண்டுகொண்டிருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் புகழ் நீடு வாழ்க.!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக