"செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் " என்ற குறள் கேட்டு ஆஹா என மகிழ்ந்தவர்கள் நாம்.
ஆனால் வயிற்றிலே பசியை வைத்துக்கொண்டு கல்வியிலே கவனம் செலுத்துவது பிள்ளைகளால் ஆகாது என சிந்தித்தவர் காமராஜ்.
காசு இல்லை கால் வயிறு கஞ்சி இல்லை இதில் கல்வியா என இருந்த மக்களுக்கெல்லாம் கடும்பசி போக்கி கல்வியை ஊட்டினார் காமராஜர்.
இலவசக் கல்வி கொடுத்து மதிய உணவை பள்ளியிலேயே பரிமாறச் செய்து ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்கும் எட்டாக் கனியாக இருந்த கல்வியைச் சொந்தமாக்கினார். . தமிழ்நாடு முழுவதும் 1957 ஆம் ஆண்டில்
15,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து தமிழ்நாட்டில் மாபெரும் கல்விப் புரட்சியையே உண்டாக்கினார் காமராஜர்.
கல்வி புரட்சி மட்டுமா தொழிற்புரட்சியும் காமராஜர் ஆட்சியிலே தானே நடந்தது?
பெரம்பூரில் ரயில் பெட்டித் தயாரிப்புத் தொழிற்சாலை, சென்னை, கிண்டியில் இந்துஸ்தான் டெலிபிரிண்டர் தொழிற்சாலை, திருச்சி, திருவெறும்பூரில் உயர் அழுத்த கொதிகலன் தொழிற்சாலை (BHEL) போன்ற முக்கியமான தொழிற்சாலைகளை திறந்துவைத்தார் .
மதராஸ் இண்டஸ்டிரியல் இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்பரேஷன், அசோக் லேலண்ட் தொழிற்சாலை, சிம்சன், இந்தியா பிஸ்டன்ஸ், டி.வி.எஸ், லூகாஸ் இவையெல்லாம்காமராஜர் ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.
நெசவாலைகளின் எண்ணிக்கையைப் பெருக்கியதும் நூற்பு ஆலைகள் தொடங்கப்பட்டதும் சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கைகள் உயர்ந்ததும் இவர் ஆட்சியிலேதான்
இதுமட்டுமல்ல ‘மெட்ராஸ் சிமெண்ட்ஸ் லிமிடெட்’ என்ற ஒரு புதிய சிமெண்ட் ஆலை இவருடைய ஆட்சிக் காலத்திலே தான் ராஜபாளையத்தில் தொடங்கப்பட்டது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு தமிழகத்தின் நீர்வளத்தைப் பெருக்க உரிய பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக காமராஜர் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார்.
அதன் பயனாகதான் கீழ்பவானி திட்டம், மணிமுத்தாறு திட்டம், மேட்டுர் கால்வாய் திட்டம், ஆரணியாறு திட்டம், அமராவதி திட்டம், வைகை திட்டம், சாத்தனூர் திட்டம், கிருஷ்ணகிரி திட்டம் ஆகியவை உருவாகின.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் தான் மின்உற்பத்தியில் வியத்த்கு சாதனைகள் நடந்தன . மின்உற்பத்தியிலும், அதைப் பயன்படுத்துவதிலும் சென்னை மாகாணம் இந்தியாவில் மூன்றாவது இடத்தை வகித்தது.
காமராஜர் ஆட்சியில்தான் பெரியார் நீர்மின்உற்பத்தித் திட்டம், குந்தா நீர்மின்உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரித் திட்டமும் ரூ. 86 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது.
இப்படி தமிழ் நாடு இந்தியாவிலேயே மிக வேகமான வளர்ச்சியைப் பெற்றுக்கொன்டிருந்தது . அதனால் தான் காமராசரை கைவிட்டு விடாதீர்கள் என்று தீர்க்க தரிசிபோல் தந்தை பெரியார் கூறினார். இன்னும் பத்து வருட காலமாவது காமராசரின் ஆட்சியில் தமிழகம் இருந்தால் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வந்துவிடும் என்று கூறினார்.
அந்த வார்த்தைகள் எவ்வளவு ஆழமானதாக இருந்திருக்கிறது பாருங்கள்.. பெரியார் கொள்கையில் வந்த பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதிக்குப் பின் இன்றுவரை தமிழர் நலம் காக்க, தமிழகத்தின் நலம் காக்க, தாய் ழியாம் தமிழைக் காக்க வேறு யாரும் இல்லாமல் இருக்கிறோம். தமிழனுக்கு விடிவுஎன்பது மீண்டும் பெரியார் அண்ணா கொள்கைகளைக் கையிலெடுத்தோர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே முடியும். அதுவரை தமிழனுக்கு விடிவு என்பது இல்லை.
என்ன செய்வது இன்றைய துருப்பிடித்த அரசியல் காலத்தில் நின்றுகொண்டு காமராசரின் அன்றைய பொற்காலத்தை எண்ணி எண்ணி வியந்தபடியேதான் இன்றைய தமிழர்கள் இருக்கிறோம்.
இப்படி நாட்டு நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு தொண்டாற்றிய பெருந்தலைவர் காமராசரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்.
இப்படி தமிழகத்தின் முதல்வராகவும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முன்னோடியாக இருந்த மூலவராகவும் இருந்த காமராசர் வாழ்க்கையில் எல்லோராலும் எளிதாக அணுகமுடியுமளவிற்கு மிகச் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தார் ஆனால் சிந்தனையில் யாராலும் எட்ட முடியாத உயரத்தில் ஓங்கியிருந்தார்
வேப்பமர காற்று வாங்கி கொண்டு சாதாரண பெஞ்சில் ஒரு முதல்வர் படுத்து ஓய்வு எடுத்ததுடன் தனக்கு காவல் வந்த ஒற்றை போலீசையும் தூங்க சொன்ன மாமனிதர் தன்னலமற்ற, தன்னிகரற்ற உயர்ந்த மனிதரின் சீரிய தொண்டினை அவரின் பிறந்த நாளான இன்று நினைவு கூறுவோம். "ஒத்த புள்ளைய பெத்து நாட்டுக்கே கொடுத்துத்துட்டேன்" என்று கூறிய சிவகாமி அம்மையாரைப் போற்றுவோம்.
click to read
http://latharaniyinsorchithirangal.blogspot.in/2016/07/blog-post_14.html
எழுத்து: லதாராணி பூங்காவனம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக