ஆறறிவின் மெய்ப்பாடும் அறிவுலகப் பற்றும்
அருந்தமிழர் வாழ்விற்கு அயராத தொண்டும்
பேராசான் பெரியாரின் பேராற்றல் துணையும்
பகுத்தறிவுப் பாதையிலே பயணிக்கும் துணிவும்
கார்மேகம் பொழிவதுபோல் கருத்துமழைப் பொழிவும்
களைப்பின்றிச் சகதிகளைத் தூர்வாரும் துணிவும்
ஆரியர்கள் உளறல்களை அடுத்தநொடி அடக்கி
அறியாமை இருளகற்றும் ஆசிரியர் வாழ்க!
- கவிஞர். லதாராணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக