கடலூர் வண்டிபாளையத்தில் ஆய்வு நடத்தச் சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால்
புரோஹித் கீற்று மறைப்புக்குள் பெண் ஒருவர் குளித்ததைப் பார்த்ததாக
புகார் எழுந்துள்ளது.
ஆளுநர் தன்னுடைய குழுவுடன் சென்றே ஆய்வுக்களத்தில் பார்வையிட்டார். ஏதோ யாருமறியாமல் தனியாகச் சென்று ஒரு வீட்டின் குளியலறையை எட்டிப் பார்த்தது போன்று, இதைக்குறித்து அநாகரீகமாக பதிவுகள் இடுவது பதிவிடுபவர்களின் கீழ்த்தரமான எண்ணத்தைப் பிரதிபலிக்கிறது .
தமிழ் நாட்டு அரசியலின் தரம் குறைந்துகொண்டே வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி குறித்த அரசியலார் சிலரின் அருவெருவப்பான கருத்துக்களைப் பார்க்கும்போது உறுதிப்படுகிறது.
மக்களை நல்ல வழியில் நடத்திச் செல்லவேண்டும் என்ற அக்கறையற்றவர்களாக இருப்பதை இவர்களின் இதுபோன்ற பதிவுகள் புலப்படுத்துகிறன.
மக்களை நல்ல வழியில் நடத்திச் செல்லவேண்டும் என்ற அக்கறையற்றவர்களாக இருப்பதை இவர்களின் இதுபோன்ற பதிவுகள் புலப்படுத்துகிறன.
- லதாராணி பூங்காவனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக