சென்னையில் சூளைமேட்டில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி பவித்ரா மீது கார் மோதி பலியான சம்பவம் வருத்தத்திற்குரியது.
ஆனால்,
குழந்தைகளை ரோட்டில் விளையாடவிடுவது தவறு. சாலைகள் என்பது விளையாட்டு மைதானம் அல்ல. அது போக்குவரத்திற்கானவை என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எங்கு பார்த்தாலும் பிள்ளைகள் ரோட்டில் கிரிக்கெட் ஆடுவதும், புட்பால் ஆடுவதும் அதனால் வாகன ஓட்டிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் பலவிதமான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
சிறுவர்கள்(பெரியவர்களும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு) தெருவில் கிரிக்கெட், புட்பால் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதால், அக்கம்பக்கத்து வீடுகளில் நிறுத்திவைத்திருக்கும் கார், பைக் போன்ற வாகனங்களைச் சேதப்படுத்துவதும், வீட்டின் கண்ணாடிக் கதவு, ஜன்னல் மற்றும் காம்பவுண்ட் விளக்குகளை சேதப்படுத்துவதும் மட்டுமல்லாமல், தெருவில் செல்பவர்கள் மீது பந்து பட்டு விபத்துக்கள் நடப்பதும் என சென்னை முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
சென்னை போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள பெரு நகரங்களில், இவையெல்லாம் கட்டுப்படுத்தப்படவேண்டும்.
சாலையில் விளையாடுபவர்களுக்கு இதுபோன்ற அசம்பாவிதங்களும், விளையாடுபவர்களால் பொதுமக்களுக்கு அசம்பாவிதங்களும் நடக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு இனி கவனமாக இருப்பதும், சாலைகளில் விளையாடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதும் அவசரமான தேவை.
காவல் துறை அதிக கவனம் கொள்ளவேண்டிய இன்னொரு தளம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக