என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

சனி, 23 டிசம்பர், 2017

தந்தை பெரியார் புகழ் ஓங்குக!

 ----------------------------------------------
வையகத்தில் பிறக்கின்ற மனிதர் யார்க்கும்   
        வேண்டுவது மானமும்நல் அறிவு மென்றார் 
பொய்யர்கள்தம் சூழ்ச்சிதனைப் புரிந்து கொள்ளா   
       புகழ்மிக்க தமிழர்களின் நிலையைக் கண்டு
உய்யும்வழி இதுவென்றே உணர வைத்து 
       உருக்குலைந்த வாழ்வதனை  உயர வைக்க
மெய்வருத்திப் பகுத்தறிவைப் பரவ வைத்த 
       மேன்மைமிகு பெரியார்தம் நாமம் வாழ்க!


-  லதாராணி பூங்காவனம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக