என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தாய்ப்பால் விழிப்புணர்வும் ஆபாசப் படங்களும்



                                    

ஆகஸ்ட் 1 - தாய்ப்பால் தினம்.

தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவத்தை இளம் தாய்மார்களுக்கு உணர்த்துவதாக சமூக வலைத்தளங்களில் நேற்றுமுதல் பல புகைப்படங்கள் வெளியாகி , அதிலும் குறிப்பாக நடிகை கஸ்தூரியின் புகைப்படம் பெருமளவில் ஆராதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 

பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க விழிப்புணர்வுப் படமாம். 

இதைத் தவறு என்று  விமர்சிக்கும் பெண்கள் மீது, தங்கள் மீது இந்தச் சமுதாயம் இழிவான பார்வையைப் பார்த்துவிடக்கூடாதே என்பதற்காக இப்படிப்பட்ட படங்களை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிறார்கள் என்று விமர்சனம் வேறு. 

இதைவிட ஆண்களின் நிலைதான் மோசம். 

இப்படிப்பட்ட புகைப்படங்களை போட்டுவிட்டு, நாங்கள் யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை அல்லது பார்க்க மாட்டோம் என்று ஆண்களை வலுக்கட்டாயமாக சொல்லவைப்பது, அவர்கள் முகத்தில்  நல்லவர்கள் என்ற முகமூடியை அணிவிக்கும் முயற்சியைத் தவிர வேறென்ன? 

அடிப்படையான ஒன்றை மட்டும் புரிந்துகொண்டால் போதும். 

தாய்ப்பால் என்பது முக்கியமானது. அதை, தான் பெற்ற குழந்தைக்குக் கொடுப்பது ஒவ்வொரு பாலூட்டியின் கடமை.
தாய்ப்பாலில் ஒரு குழந்தை வளர்வதற்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் இருப்பது மட்டுமன்றி குழந்தைகளை நோய் தாக்காமல் காப்பதற்கும் தாய்ப்பாலே சரியான உணவு என்பதை உணரவைத்து இளம் தாய்மார்களை தங்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்டுவதின் அவசியம் குறித்து  சொல்லவேண்டுமே தவிர கஸ்தூரி போன்று மார்பகத்தை அப்படியே(அதுவும் இரண்டையும்) காட்டிக்கொண்டுதான் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும் என்பது இல்லை.

எந்த வீட்டில் பெண் இரண்டு மார்பகங்களையும் திறந்து போட்டுக்கொண்டு குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருக்கிறாள்? (உலகத்தில் எந்த இடத்திலும் நடக்காத விந்தை இது) 


மார்பகங்கள் என்பது,

 "ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடியவைதான்". 

நாங்கள் திறந்த மார்பகங்களோடு இப்படித்தான் பாலூட்டுவோம் ஆனால் ஆண்கள் அதை புனிதமாகக் கருத வேண்டும் என்பது தவறு. 

இதில் புனிதம் புண்ணாக்கு என்ற எதுவும் இல்லை. குழந்தையின் வளர்ச்சிக்கும், சுரக்கும் பாலை, குழந்தைக்குக் கொடுக்காமல் அழகு கெட்டுவிடும் என்ற பொய்யான தகவல்களை உண்மையென்று நம்பி பால் கொடுக்க மறுப்பதால், மார்பில் "பால் கட்டு" முதல் "புற்றுநோய்" வரை ஏற்படும் அபாயம் உண்டு என்பதை விளக்கி,  குழந்தைக்கு மட்டுமல்லாது தாயின் உடல்நலத்திற்கும், தாய்ப்பால் ஊட்டுவது அவசியமானது என்பதை புரிய வைக்கவேண்டும் .


இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறையோ,மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறையோ குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும் என்ற நிலையில்
பாலூட்டும் பெண் 24 மணி நேரமும் என் மார்பகத்தில் என் குழந்தை குடிப்பதற்கான பால் தான் இருக்கிறது என்று தாய்மை உணர்வோடே அதைத் திறந்து வைத்து இருக்க முடியுமா?  இல்லைதானே?  மறைத்துதானே வைத்திருக்கிறாள்? ஏன்? இப்படி இருப்பதுதான் நாகரீக வளர்ச்சி. 

குழந்தைக்குப் பால் கொடுக்கும் நேரம் தவிர்த்த மற்ற நேரங்களில் அவளும் சாதாரண பெண் தான். பால் கொடுக்கும் காலமான, கிட்டத்தட்ட 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை உடலுறவில் ஈடுபடாமல் எப்போதும் தாய்மை உணர்விலேவா இருக்கிறாள்? இல்லையே. அதனால் பால் கொடுக்கும் நேரத்தில் மட்டும் வேண்டுமானால் அவள் மீதான எண்ணம் மாறுபட்டிருக்கலாம்? அதற்குப் பிறகு….? 

ஒரு வேளை, கஸ்தூரி போல் மார்பகங்களைத் திறந்து போட்டுக்கொண்டு பால் கொடுக்கும் தாய்மார்களைப் ஆண்கள் நேரில் பார்க்க நேர்ந்தால், ஒரு சிலர் நாகரீகம் கருதி தங்கள் முகத்தைத் திருப்பிக்கொள்வார்களே தவிர  எல்லா ஆண்களும் அப்படி இருக்க மாட்டார்கள். சிறிதளவாவது மாறுபட்ட எண்ணம் எழத்தான் செய்யும் 

படம் போட்டு கதை சொல்லு…  என்னும் அளவிற்கு படிக்காதவர்கள் அதிகம் இல்லை தற்காலத்தில்.  பல கிராமங்களில் படிக்காதவர்கள் உண்டு என்று உடனே நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன், கிராமங்களில் நாகரீகத்தைக் கடைபிடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு டவல் அல்லது துப்பட்டா போட்டு மறைத்துக்கொண்டுதான் எல்லாத் தா
ய்மார்களும் குழந்தைகளுக்குப்  பாலூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், நாகரீக வளர்ச்சியடைந்ததாகக் கூறிக்கொண்டு, பெண் உரிமை , பெண்ணீயம் என்று பேசிக்கொண்டிருப்பவர்கள்தான், இப்படிப்பட்ட தவறான செயல்களை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட தவறுகளை ஆராதித்துக்கொண்டே ஒன்றை கவனிக்கத்  தவறி விடுகிறார்கள்.

மார்பகத்தைத் திறந்து போட்டுக்கொண்டிருப்பது உன் விருப்பமென்றால், ஆபத்து உனக்கு மட்டுமல்ல, ஒன்றுமறியாத பிஞ்சுக் குழந்தைகளுக்கும் தான் . … 

ஆம், இப்படிப்பட்ட படங்களைப் பார்த்துத் தூண்டப்பட்டவர்களால்  தான் , ஏதும் அறியாத  2 வயது பெண்குழந்தைகள் முதல் ஏதும் இயலாத 105 வயது மூதாட்டி வரை காமப் பசிக்கு இரையாக்கப்படுகிறார்கள் 

இப்படிப்பட்ட படங்களின் தூண்டுதலினால் தான் சிறார்கள் குற்றவாளிகளாக மாற்றப்படுகிறார்கள்.  

உண்மையைச் சொல்லுங்கள், கஸ்தூரியின் இரண்டாவது படத்தில் … மார்பகத்தின் அந்த வெளிப்பாடு எதற்கு?  இதைப் பார்க்கும் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வருமா? அவள் மீது அருவெறுப்பு தான் வரும். 

அழுத்தமாகச் சொல்கிறேன் …"குழந்தைக்கு வயிற்றுப் பசியாற்றிக் கொண்டே பிற ஆண்களுக்கு உடற்பசியைத் தூண்டுபவள் குற்றவாளியே. அவள் தாயே அல்ல."

- லதாராணி பூங்காவனம் 





1 கருத்து:

  1. மார்பகத்துக்குத் தாய்ப்பால் கொடுத்தல், எதிர்ப் பாலின உணர்வு தூண்டுதல் என இரு பணிகள் உண்டு. ஒன்றை மட்டும் சொல்லிப் புனிதப்படுத்தத் தேவையில்லை. நல்ல அழகிய மார்பகம் கொண்ட பெண்ணின் அந்த அழகைச் சட்டென ரசித்துத் திரும்பும் ஆண்களைப் பொறுக்கி போல் கருத வேண்டாம் எனச் சொல்வேன். அவன் அந்த அழகால் ஈர்க்கப்படா விட்டால், அவனிடம் ஏதோ கோளாறு இருப்பதாகத்தான் பொருள்.

    பதிலளிநீக்கு