இது தலித் பெண்மணி என்றும் , அவரை நிர்வாணப்படுத்தி தெருவில் நடக்கவைத்து அவரை அடிப்பவர்கள் பாஜக குண்டர்கள் என்றும் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுவருகிறது.
சம்பவம் இதுதான்.
(நடந்தது August 21)
பீகார்
மாநிலத்தில் ஆரா என்ற இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் ரயில் தண்டவாளத்தில் பீமலேஷ் என்ற 19 வயது இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கிடைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே அவர் காணவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிமெலேஷின் ஆண்குறியில் காயங்கள் இருந்ததைக் கண்ட அவர் உறவினர்கள், அந்த ரயில்வே தண்டவாளத்துக்கு அருகில் இருந்த ரெட் லைட் ஏரியாவில் பாலியல் தொழில் ஈடுபட்டிருக்கும் அந்தப் பெண்மணியின் மேல் சந்தேகம் ஏற்பட்டு, பீமலேஷ் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும், அதற்கு இந்தப் பெண்மணி உடந்தை என்றும், அடித்துக் கொலை செய்துவிட்டு அந்தக் கொலையை மறைக்கவே சடலத்தை ரயில் தண்டவாளத்தில் போட்டிருப்பதாகவும் அந்தப் பெண்மணியின் மேல் சந்தேகம் கொண்டு பொதுமக்களோடு சேர்ந்து அவரை அடித்து, உடைகளைக் கிழித்து அம்மணமாக தெருவில் நடக்க விட்டு கொடுமைப்படுத்துகிறார்கள்..
ஏனென்றால்,
அங்கு பாலியல் தொழிலாளிகளுக்கு மீடியேட்டராக(மாமாக்கள்) வேலை செய்யும் ஆட்கள் மூலமாக, கொஞ்சம் வசதி படைத்த நபர்கள் வரும்போது (அந்த மாமாக்களால்) அவர்களை மிரட்டி பணம் நகைகள் பறிப்பதும், பணத்துக்காக பலர் கொலை செய்யப்படுவதும் அதிக அளவில் அங்கு நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை, தனக்கும் அந்தக் கொலைக்கும் சம்மந்தமில்லை என்று அந்தப்பெண் கூறியும் வெறி பிடித்தவர்கள் போல 2000 ஆட்களுக்குமேல் ஒன்று திரண்டு, அங்கிருந்த கடைகளையெல்லாம் அடித்து நொறுக்கி, வன்முறையில் ஈடுபட்டு, அந்தப் பெண்மணியையும் பாஜார் வழியாகவே அடித்து இழுத்துச் செல்லும் வீடியோதான் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டு இருக்கிறது. .
இந்த சம்பவத்தில் போலீஸ் தரப்பில் 15 நபர்களைக் கைது செய்திருக்கிறார்கள். அதில் ஒருவர் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ராஷ்ட்ரிய ஜனதா தள் கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் நடந்தது சென்றமாதம். தாக்குபவர்கள் பிஜேபி என்றோ தாக்கப்படும் பெண்மணி தலித் என்றோ எங்குமே குறிப்பிடப்படடவில்லை. ஒரு பெண்ணிற்கு நடந்த அநீதி இது என்பதைக் கண்டு மனம் பதறாமல், இதை அரசியலாக்கி, பாஜக குண்டர்கள் தலித் பெண்ணை நிர்வாணப்படுத்தி தெருவில் இழுத்துச் செல்கிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரம் செய்யவது மிகவும் ஆபத்தானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக