என்னைப் பற்றி

எனது படம்
"ஆசி"ரியருக்கு மகளாகப் பிறக்கும் "ஆசி" பெற்றவள். ஆர்க்காடு நகரத்தில் ஆரம்பக் கல்வி பெற்றவள், மற்ற வலைத்தளங்களில் "யாதுமானவள்" என்ற புனைப்பெயரில் எழுதுகிறேன்.

வியாழன், 13 மே, 2021

//அவசரமும் ஆழ்ந்துணராமையும் ஆபத்தே....!//


நம் மக்கள் எதையும் கூர்ந்து கவனிப்பதில்லை, ஆழ்ந்து படிப்பதில்லை என்பதற்கு ஆதாரமாக விளங்கியது நேற்றைய கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அய்யாவின் பதிவு. 

திருமிகு இலங்கை ஜெயராஜ் அவர்கள், ரங்கராஜன் என்ற தமிழறிஞரின் இழப்பிற்கு எழுதிய இரங்கற்பா, அய்யாவின் மாணவர்களால் இயக்கப்படும்  Kambavarithy Ilankai Jeyaraj என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அந்த இரங்கற்பா எழுதியது கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் என்று 

'இரங்கற்பா எத்தனைதான் பாடுவோமோ?- கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்  என்று மிகத்தெளிவாகவே குறிக்கிறது. 

அது மட்டுமல்லாது, அந்த இரங்கற்பாவில் கடைசியில்..

//'இரங்க ராஜன்' என்னும் அறிஞன் போனான்

எம் இதயம் பதிந்திருந்த ஏந்தல் போனான்//

என்றும் மிகத் தெளிவாகவே இரங்கராஜன் என்பவருக்கான இரங்கற்பா என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால்,  இதை எதையும் ஒழுங்காகப் படிக்காமல்... தலைப்பை மட்டும் படித்துவிட்டு,கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் இறந்துவிட்டதாக நினைத்து பலரும்  அதிர்ச்சியுற்றதாகவும், மனவேதனை அடைவதாகவும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை.... தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்...

ஒரு பதிவை ஒழுங்காகப் படிக்கும் அளவுக்குத் திறமையோ தகுதியோ அற்றவர்களா இவர்கள்? அல்லது ஒரு செய்தி அறிந்தால் அது உண்மையா  என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவும் அற்றவர்களா? அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் அவ்வளவு துரிதகதியில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்துகொண்டிருக்கிறார்களா?

என்ன சொல்வது? உண்மையிலேயே வருத்தமாக உள்ளது... நம் மக்களின் செயல்களும் சிந்தனைகளும் செல்லும் பாதை ஆபத்தானதாகவே இருக்கிறது.   அய்யா இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு வருத்தம்தெரிவித்த மக்களை பார்த்து வருந்துகிறேன்.... 

மக்களின் அறியாமையும், அவசரமும்... எதையும் ஆழ்ந்துணர்ந்து படிப்பதில்லை என்பதும்  உண்மையிலேயே வேதனையளிக்கிறது. 


பின் குறிப்பு;

இப்படி அரைகுறையாகப் படித்துவிட்டு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் தமிழ் வல்லுநர்களை நினைத்து,  ஒரு இரங்கற்பாவையே ஒழுங்காகப் புரிந்துகொள்ளாத இவர்களிடம்.... இத்தனை வருடமாக நான் எடுத்துச்சொன்ன கருத்துக்கள் எப்படிப் போய்ச்சேர்ந்தனவோ என்று  கம்பவாரிதி அய்யா அவர்கள் பேரதிர்ச்சியடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உறுதி. 

- கவிஞர்.  லதாராணி பூங்காவனம் , எம்.ஏ ., எம்.காம். ,பி.எச்டி.,

ஆற்காடு  


வியாழன், 8 ஆகஸ்ட், 2019

வியத்தகு வள்ளுவம்!

  வியத்தகு வள்ளுவம் (குறளின் குரல் ) 
-------------------------------------------------------------------------
(அறுசீர் விருத்தம்)                                                                      

முகவரி ஆகி நின்று  
.       முழுஒளி வீசி மின்னும் 
மிகமிகப் பழமை யான 
.      மாத்தமிழ் இழையால் நெய்த 
தகவுறு துத்தம் போன்ற 
.       தப்பிலாச் செப்ப லோசை 
செகமது முழுதும் நின்று 
.       செம்மொழி பகர்தல் காணீர்!     ….….(1)

கதைகளின் நீள மில்லை 
.       காவியம் போலு மில்லை 
இதையிவன் அறிவ தற்கு 
.       இருவரி போது மென்று 
சிதைவுறாத் தமிழில், மெச்சும் 
.     சிறப்புடன் வனைந்து வைத்த 
புதைபொருள் உறைந்து நிற்கும் 
.     பொலிவுறு பேழை பாரீர்!            ……(2)

அறம்பொருள் இன்பம் வீடு 
.       அருந்தமிழ் விளைந்த காடு 
மறத்தமிழ் மக்கள் வாழ்வின் 
.       மாட்சிமை கூறும் ஏடு 
பிறன்மனை நோக்கல் குற்றம் 
.       பிறன்பொருள் கொள்ளல் கேடு 
அறவுரை சொல்லும் பாங்கு 
.        ஆமெனில் விலகும்  தீங்கு. ……..(3)


திறனறி என்று சொல்லும் 
.       திருந்திவாழ் என்றும் சொல்லும் 
பிறழிலா வாழ்வைச் சொல்லும் 
.        பிறவுயிர் காக்கச் சொல்லும் 
உட்பகை விலக்கச் சொல்லும் 
.        உறவுகள் பேணச் சொல்லும் 
வெட்டுக சோம்பல் என்று 
.         வெற்றிக்கு வழியும் சொல்லும் ………….(4)

சொற்றிறம் பாமை என்றும் 
          சொல்லிலே திருத்தம் என்றும் 
கற்றிடும் யாவும் நன்குக் 
.           கசடறக் கற்க என்றும் 
பெற்றவர் மகிழு மாறு 
.          பெருஞ்செயல் செய்க என்றும் 
நற்றமிழ் நயமாய் ஊட்டி 
.          நலமிகு சான்றோன் ஆக்கும்…………..(5)

சிறுகை கூழினைத் துய்க்க 
.         செறுநர் செருக்கினைப் போக்க 
சிறுமை முழுதாய் நீக்க 
.          சினத்தை அறவே  மாய்க்க ,
வறுமைப் பிணியைப் போக்க 
.         வாழ்க்கை வளமாய் வாழ,
பொறுமை காக்கச் சொல்லும் 
 .       போதனின் கூற்றும் என்னே!  ………….(6)


உற்றதைச் சொல்வ தற்கும் 
.      உள்ளதை உரைப்ப தற்கும் 
நற்றவச் செல்வன் தூய 
.      நனிமிகு தமிழில் செய்த 
சொற்பெருங் குவியல் தன்னைச் 
.      சுடரென ஏந்தி நிற்றல் 
கற்றவர் கைக்கொள் போக்கு, 
.      கருதுவீர் இது நம் வாக்கு. …..(7)

முத்திரை பதித்த வேதம் 
.      முப்பால் மொழிந்த நாதம் 
வித்தகச் சொற்கள் தாங்கி 
.       வியத்தகு ஆற்ற லோடு  
இத்தரை மீதில் வாழும் 
.       இன்னுயிர் முழுவ தற்கும் 
சத்தியக் குறளை யாத்த 
.       சால்பினன் பாக்கள் வாழி!

- கவிஞர்.  லதாராணி பூங்காவனம் எம்.ஏ ., எம்.காம்., 


ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

இலங்கை தேவாலயங்களில் குண்டு வெடிப்பு….மனித நேயம் எங்கே?




இலங்கை குண்டுவெடிப்பில் இறந்துபோனவர்களையும், கைகால்கள் இழந்து பரிதவிப்பவர்ளையும் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களையும், சொந்தபந்தங்களை இழந்து துயருற்று இருப்பவர்களையும் காணும்போது மனம் பதறுகிறது. 

இந்த நிகழ்ச்சியை நம்முடைய பெரியார் வழிவந்த பகுத்தறிவுவாதிகள் சிலரே..

"தேவலத்திலேயே குண்டுவெடிப்பு, உயிர்த்து எழுந்தவர் குண்டுகளோடு வந்து உங்களையும் தேவலோகத்துக்கு தூக்கிட்டு போய்ட்டாரா…?"

"குண்டு வெடிப்பைத் தடுக்காம இயேசு எங்க போனார்? "
"இயேசு உயிர்த்தெழுந்தார்… குண்டு வெடித்தது. உயிர்கள் பலியாகின … சாத்தான் செயலா… யார் வல்லமை? "

என்று இன்னும் பலவிதங்களில் கடவுள் மறுப்புக் கொள்கையை இந்த நிகழ்வோடு ஒப்பிட்டு நக்கலாகப் பதிவிடுவது வருத்தமாக இருக்கிறது. (இப்படிப் பேசுவதால்தான் பெரியாரை அவர்கள் தரக்குறைவாகப் பேசுகிறார்கள்)

கிருத்துவ தேவாலயத்தில் மட்டுமல்ல….ஹோட்டலில் குண்டுவெடிப்பு இரயில்வே ஸ்டேஷனில் குண்டுவெடிப்பு… 

கோவிலுக்குச் சென்றவர்கள் அறியாமையில் சென்றார்கள் என்றால், இரயில் நிலையத்துக்குச் சென்றவர்களும்  அறியாமையினால் சென்றார்களா? 

தீவிரவாதிகள் எங்கு வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்துவார்கள்.  அது தேவாலயமாகவும் இருக்கலாம், பகுத்தறிவு பேசும் கூட்டங்களாகவும் இருக்கலாம். இரயில் நிலையங்களாகவும் இருக்கலாம், மருத்துவமனைகளாகவும் இருக்கலாம். பள்ளிக்கூடங்களாகவும் இருக்கலாம், முதியோர் இல்லங்களாகவும் இருக்கலாம்.

தீவிரவாதத்தால் நடந்த குண்டுவெடிப்பை கண்டிக்கவேண்டுமே தவிர, இந்த இடத்தில்  நாத்திகம் பேசி மகிழக்கூடாது.

தந்தை பெரியார் சிலையை உடைத்தாலே தீவிரவாதம் என்று கொதிப்படையும் நாம் 350 க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்திருப்பதை கேலியாகப் பேசுவது மனிதநேயமற்ற செயல். 

இது பெரியாரியம் அல்ல. பெரியார் மனிதநேயத்தைப் போற்றியவர். போற்றவேண்டும் என்று சொன்னவர். 

பகுத்தறிவாளர்கள் பக்குவப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தயவு செய்து இதுபோன்ற பதிவுகளைத் தவிர்க்கவும். 

- கவிஞர். லதாராணி பூங்காவனம்.  M.A., M.Com., 

புதன், 13 பிப்ரவரி, 2019

கவுசல்யாவின் மறுமணமும் சௌந்தர்யாவின் மறுமணமும்


சமீபத்தில் நடந்த இரண்டு திருமணங்கள் 
தமிழ் நாட்டின் பேசுபொருளாக
மாறியது.

ஒரு திருமணத்தைப்  போற்றிப் புகழாத வாய்களே இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு பெருமை வாய்ந்த திருமணமாக அத்தனைபேரும் வாழ்த்துக்களை வாரிக் குவித்தார்கள் 

அதே நேரம், மற்றொரு திருமணத்தைக் கடித்துக் குதறி ஆபாச வார்த்தைகளை அள்ளிக்கொட்டி அவமானமாகக் கருதுவதாகப் பெரும்பாலோனோர் பொங்கிப் பிரவாகித்தார்கள். 

ஆம், 
வாழ்த்து வாங்கியது சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் மறுமணம். 
வசவு வாங்கியது கவுசல்யா சங்கரின் மறுமணம்.

இரண்டுமே மறுமணம் தான். 

மார்ச் 2016 கவுசல்யாவின் காதல் கணவன் ஆணவப்படுகொலை செய்யப்பட, சரியாக இரண்டு வருடம் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர்,-2018 இல் சக்தியை காதலித்து மறுமணம் செய்துகொள்கிறார். (விதவைத் திருமணம்)

அதேபோல், 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரைக் காதலித்துத்  திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, ஒரு ஆண்குழந்தையைப் பெற்ற பிறகு, மனவேற்றுமை காரணமாக  ஜூன் 2017ல்  கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றபின், சரியாக  ஒரு வருடம் 7 மாதத்திற்குப் பிறகு, பிப்ரவரி - 2019 ல் விசாகன் என்பவரைக் காதலித்து மறுமணம் செய்துகொள்கிறார். 

ஆனால் மக்கள்  கௌசல்யாவை நோக்கிப் பாய்ச்சிய விஷ வார்த்தைகள் ஏராளம்.

உடல் சுகத்துக்கு இன்னொரு திருமணம் தேவைப்படுதா இவளுக்கு?
அப்படின்னா சங்கரை காதலித்தது பொய்யா?
உண்மையாவே சங்கரை காதலித்திருந்தால் இன்னொருத்தன் மேல எப்படி காதல்வரும்?  என்பன போன்ற ஏகப்பட்ட  கேள்விகளால் அந்தச் சிறுபெண்ணை ஆபாசக்  கேள்விகளால் தாக்கிக் காயப்படுத்தியது ஒரு கூட்டம். 

இதையெல்லாம் விட மேலாக, ஒரு ஊடகம் இப்படி தலைப்புச் செய்தியைப் போட்டது " கணவரின் ரத்தம் காய்வதற்குள் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட கௌசல்யா"  என்று. 

ஆனால், நேற்று நடந்த ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவும், காதலித்துத்தான் முதல் திருமணம் செய்துகொண்டார். மணமுறிவு ஏற்பட்டபிறகு, இன்னொரு காதலுக்கு ஆட்பட்டார். ஒரு குழந்தைக்குத் தாயானநிலையிலும்அவருக்கு  மறுமணம் செய்துவைத்தனர் பெற்றோர். 

ஆனால்,  கவுசல்யாவிடம் கேட்ட கேள்விகள்போல, சௌந்தர்யாவை நோக்கி, முதல் காதல் பொய்யா, காதல் உண்மையாக இருந்தால் இரண்டாவதுதாக எப்படி இன்னொருவரின் மேல் காதல் வரும் போன்ற எந்தவிதமான கேள்விகளும் எழவில்லை, 

காரணம், சவுந்தர்யா மிகப் பிரபலமானவரின் மகள். அதனால்தான் அவரின் மறுமணத்தைப் புளகாங்கிதமாகப் பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் ஒரு நல்ல தந்தை என்று பாராட்டப்படுகிறார். தன்னுடைய மகளின் நல்வாழ்விற்காக மறுமணம் செய்வித்தது அவர் செய்த புரட்சி என்று பேசப்படுகிறது.  

ஆனால் கவுசல்யா ஒரு சாதாரண வீட்டுப் பெண்,  கண்முன்னே காதல் கணவனை வெட்டிச் சாய்த்த வேதனையைச் சுமந்துகொண்டு, சிறு வயதிலேயே தன்  சிரிப்பை மறந்து, ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து, தன்னை வாழவிடாமல் செய்த சாதிவெறிக்கு எதிராக நின்று, தன்னால் இயன்றதை இந்தச் சமுதாயத்திற்குச் செய்ய வேண்டும் என்று நினைத்த அவளுக்கு மீண்டும் ஒரு காதல் துளிர்விட்டதும், மறுமணம் செய்ததும், தந்தை பெரியார் கொள்கையாளர்களையும், சில முற்போக்குச் சிந்தனையாளர்களையும் தவிர,  இந்தச் சமுதாயத்தில் வாழும் மற்றவர்களுக்குத் தவறாகப் படுகிறது. 

எப்படி முடிகிறது? கவுசல்யாவும், சவுந்தர்யாவும் ஒன்றுதான். இவர்கள் மட்டுமல்ல இவர்களின் நிலையில் இன்னும் எத்தனையோ பெண்கள்  இருக்கிறார்கள். விதவைத் திருமணம், விவாகரத்து பெற்றபின் மறுமணம் என்று செய்துகொள்ளும் பெண்களில் பணம், பதவி இருப்பவர்கள் செய்தால் மட்டும் பாராட்டுவதையும், பாமர மக்கள் வாழ்க்கையில் நடந்தால் பழிப்பதையும் நிறுத்துங்கள். 

மனைவியை  இழந்த அல்லது பிரிந்த ஒரு ஆணுக்கு, மறுமணம் செய்துகொள்ள எவ்வளவு உரிமை உள்ளதோ அதே போல, கணவனை இழந்த அல்லது பிரிந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

காலம் மாறிக்கொண்டிருக்கிறது.. இன்னும் பெண்களை அடிமைகளாகவே  வைத்திருக்கவேண்டுமென்ற நினைப்பிலிருந்து இந்தச் சமுதாயம் மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதையே இந்த இரு திருமணங்களும் உணர்த்துகிறது. . 

- கவிஞர். லதாராணி பூங்காவனம் 

வியாழன், 3 ஜனவரி, 2019

Gender exploitation in south India and rise of the Self-Respect Movement


Gender exploitation in south India and rise of the Self-Respect Movement 

- Authored by Latharani Poongavanam, M.com, M.A (Tamil)

(This Article was Submitted in International Conference on Periyar Self-Respect Movement held at University of Cologne, Germany on July, 26,27 & 28 - 2017)


Introduction


Through this article we are going to analyse gender inequality in South India and the rise of the Self Respect movement.

The SRM (Self Respect Movement) had been going on for more than a century. But only after 1925 had the movement taken an organized form with systematic opposition given against the Social Ruling Classes. This was possible due to the enigmatic philosopher popularly known as “Thanthai Periyar”. 

Let us begin by discussing the man, the movement and his times; and how he has changed the very identity of social justice.  

E.V.Ramasamy is a revolutionary, who propagated the ideology of self-determination to all sections of the society in all aspects of their lives; and for the first time in living memory of the Indian society; codified under his organisations the founding principle of Self-respect that all humans are born free and equal.

Erode Venkatappa Ramasamy (17 September 1879 – 24 December 1973) popularly known as Thanthai Periyar in the sub-continent; was an immensely revolutionary social activist who started the Self-Respect Movement and Dravidar Kazhagam; he began the systematic decimation of the social inequality that persisted in the sub-continent. E.V. Ramasamy propagated the principles of rationalism, self-respect and the eradication of the caste system; and to achieve this he put women’s right front and centre of his movement. 

His ideologies were the foundation on which the social reforms in Sub-continent were erected; he opposed the ostracism and exploitation of non-Brahmin indigenous people of South India. The core of the Self-Respect Movement envisioned by Periyar was the dissemination of relevant political education; and breaking the chains of slavery that had been tied in the minds of the masses for eons through needless customs, meaningless ceremonies and blind superstitious beliefs. 

The Self-Respect Movement successfully campaigned for their principles by starting their Tamil weekly magazine “Kudi Arasu” and their English Journal “Revolt” in 1925, 1928 respectively. The publications served as force multipliers in addition to the district meetings for the dissemination of the Self-Respect Movement’s principles. The prevailing traditional customs were constructed to be disadvantageous to women and the lower caste women bore the brunt of this discrimination through systematic exploitation in the name of religion and tradition; the Self-respect movement was the result of the unification of generational sporadic struggles against social injustices. 

Most people are aware about the social divisions inflicted on a heterogeneously stable society by the “Manu-Needhi Brigade” as early as the 10th century AD. In the sub-continent economic slavery was rampant during those times. These slaves; however had the opportunity to earn their freedom.  But since the introduction of Manu Neethi Dharma in South India; for the first time, a whole section of the society was made into perpetual slaves both socially and economically.

Under the Manu-Neethi social construct, the Tamil society had undergone a profound change. The whole basis of the society changed from a matriarchal society to a patriarchal society.  The Manu Needhi dharma intensely decimated the Tamil culture; stripping off its core values and principles.
The list of atrocities committed on women and their self-respect are numerous; but due to publication constraints we are going to narrowly focus in-depth at few major atrocities for this article and how the self-respect movement enabled the affected classes to demand and vehemently acquire justice.


Dress code and Class distinction


The division of land and access were restructured according to the Manu Dharma; Brahmins, Kshatriyas and other upper castes were allowed to own lands, but the Shudras were denied the opportunity to even hold on a single square foot of land of any kind. (K. Veeramani, 2004)
Whenever a Brahmin was walking on the road the Shudra must have had made themselves scares. Or else be punished through public whipping. Whenever the Shudra walked on public roads; he or she must have a broom tied to their back such that the broom would sweep the paths they had walked on, thereby cleansing the land of the impurity the Shudras had palliated upon it by walking.. (D. Gopal Chetti, 1920) 

Strict impositions were placed on the Shudras on how to walk, behave on roads, gatherings and public places, and while using common utilities. If a Shudra walks on the road and hears a Brahmin reciting anything in Sanskrit, the offending Shudra was punished by pouring hot oil in their ears till they became deaf. (K. Veeramani 2004) 

Ironically enough, the present day Indian government is trying to teach and revive the language whose very existence inflicted a great social injustice on the lower castes of the society. They are now trying to teach Sanskrit to Shudras and asking them to forget all the ancestors who were rendered deaf just for hearing the same language.

The Manu dharma imposed strict dress codes for the society. The dress code was most atrocious towards the Shudra castes. Men were not allowed to wear any clothes on their upper body and conversely no piece of clothing should reach below the knee caps of the lower body. Similarly, women, especially Shudra women were not allowed to wear clothes on their upper body. The Shudra women must be naked above the waist. (Dr. Joyi Balan, 2013). 

If any women wanted to cover her breasts, they’d have to pay a special tax to earn the privilege of covering their own body. This practice was most forcibly imposed in the south west of India. (Present day state of Kerala.) The Nambudiri caste demanded that all women must be revealing their upper body in their presence with no exceptions. (Dr. Joyi Balan, 2013)

Even if the women were carrying water, they must ensure their breasts must be in the full public view and not covered. I.e. the women were supposed to carry water pots on their heads and not on their hips; So that the upper caste men could have an unhindered view of the woman’s breast. The rate of the breast tax was directly proportional to the size and perkiness of the breasts. The depravity of the Brahmin society is further illuminated through the fact that the breast tax was imposed on women between the age of 15 and 35. 


Nangeli


Till the later part of the 19th century women in Kerala had to pay a breast tax for the privilege of covering their chest with a cloth. Looking back at the evolution of the concept of gender equality, we can see clearly that laws and social norms always had more control in drawing arbitrary lines and proclaiming that these lines were not meant to be crossed. 

The early 1800s was the time these oppressive practices were at its peak. There existed nearly 110 extra taxes that were imposed by the upper caste which interfered with various aspects of daily life like commerce, social freedom and domestic comfort of the lower caste people. The system was designed to ensure that the lower caste remained in a cycle of debt and poverty while the upper castes thrived. 


As resentment grew among the lower castes on this oppressive system, sporadic rebellion erupted across the Travancore region. The retribution by the upper castes were swift and merciless which included sexual assault, rape, stripping of lower caste women in public places; and demolition of their homes. These events led to the ‘Channar Revolt’ within the kingdom of Travancore. The revolt forced the British governor of Madras to intervene and force the kings of Travancore to issue two proclamations; one in 1859, by Maharaja Utram Thirunal and the other in 1865 by Maharaja Ayilyam Thirunal, abolishing the taxation in the kingdom of Travancore alone. This practice was continued in other parts of south India. (Dr. Joyi Balan) 


Of all the acts of bravery committed by the revolutionaries one stands apart, in 1803 a women named Nangeli hailing from Cherthala bravely defied the orders of the state; a tax collector was dispatched to her house to collect the breast tax when the story of her refusal spread; Nangeli instead of placing money on the plantain leaf and presenting it to the collector, cut off her breasts with a sickle knife and presented it to him; Nangeli died the same day and her husband Chiru kandan joined her in  the protest, by stepping in to the pyre (Dr. S. Joyi Balan, 2013, Vayalar Madhavan kutty,2016, Dr. Sadhasivan, 2013); this was a very singular act committed by a man at that period. 


Under the context of the ‘Channar Revolt’ we can correlate modern day gender suppression carried out under theocratic guise, particularly the restriction on the right of entry into various temples of Kerala. 


The term “Azhinjadikal”, which roughly translates into ‘loose women’ in English, is frequently being used to describe women who demand the right of entry into temples; the term was also used in the past to describe the Nadar women of Travancore who led the Channar revolt. (Dr. Joyi Balan, 2016) They were never ‘blessed’ or approved of by society, but it was these ‘loose women’ who secured the right for women in Kerala to dress the way they want to.


It is also why it matters to keep fighting at every point. There will always be people who say ‘it isn’t as bad as it used to be’ and that modern feminists and Self-respect advocates are fighting for causes that don’t really matter. But this isn’t true. The scale of the impact of these battles will only be put into perspective with the passage of time, when closed minds begin comprehending the bigger generational war that still continues.


Though the restrictions were officially removed by 1865 the practice continued till 1957; it was Periyar, his self-respect brigade and self-respect activists who had taken up the ‘Thol Seelai Porattam’ and forced the government of the day to promulgate enforceable laws against this exploitation. 


Sathi


The most infamous injustice inflicted on women is “Sathi” but the extent of this deprived practice has been limited to the burning of a widow. We will now focus on the true nature of this deprived practice.

The Sathi system's ingenuity was that it transferred power and wealth to the Brahmins by making kinsfolk murderers; that is people who otherwise would have been providing and caring for the widow and her family. (A Venkataachala Naicker,1882)
Explaining the ritual process carried out during Sathi will give a better understanding about the true nature of this deprived practice.

After the death of the husband, the widow was dressed up as a bride with all her jewellery and valuables. When the time had come to enter the pyre, the widow removed her valuables on hand and turned it over to the performing priest. 

The Poet Venkatachala Naicker had written about this atrocious practice in his book  ‘Hindu Madha Aachara Aabaasa Dharsini’. The poem goes like this...

உடன் கட்டை ஏறும் பெண்கள் உகந்து அணி நகைகள் எல்லாம்
கடன் ஈந்தார்க்கு ஈவார் போலக் கடமை அந்தணர்க்கே ஈந்து
கடத்துடன் ஆவி பதைத்து கலங்கி தத்தளித்துக் கூவும்
மடக்கொடி அவள்தன் கோரம் மறையவர் மகிழ்வார் அன்றோ?  (724)

If the widow had an infant child, the infant was cut into pieces according to the number of brothers the deceased husband had.  The infant’s remains were to be buried in their respective lands to bring good fortune. This dismemberment was carried out by the priest. (A Venkataachala Naicker,1882)
The following poem clarifies this process. 

இளம்பிள்ளை அதனைக் காளிக்கு எதிர்த்தம்பம் அதனில் கட்டி
உளங்களித்து அதன் தேகத்தில் உரித்திடச் சுரிகை தன்னில்
பிளந்திடும்  துணுக்கைத் தங்கள் புலத்தினில் புதைக்கத்  தான்யம்
விளைந்திடும் என்றே சொல்லி சித்ரவதை செய்தார் சிசுக்கள் தம்மை. (727)

All the lands and valuables belonging to the widow were given to the performing priest. Similarly the valuables and lands belonging to the husband were distributed to the next male heirs.
If no heirs were left, the entire wealth became the property of the presiding priest tax free.
Another poem from the same book reveals a distinctly troubling aspect of the Sathi practise; with regard to the fate of an adolescent child of the widow.


“இனிமை நாயகன் தன்னோடே இறங்கிப் பெண் நெருப்பில் தீய
தனி மைந்தர் தசை எலும்பைத் தடித்துத் தன புலத்துக்கு ஈய
மனிதரைத் துண்டில் குத்தி மரத்தினால் சுற்றி வீழக்
கனிந்திடும் நெருப்பில் தோய்ந்து கால்வழண்டு அதனில் சாக  (728)”

The lines describe the adolescent child of the widow being skewered above a fireplace and his remains being distributed between the priest castes. (A Venkataachala Naicker,1 K. Veeramani, 2004882). This message indicates the act of ritual cannibalism as a staple of the Sathi rites and this practise of human flesh consumption is still practiced by the Aghori monks in Varanasi albeit posthumously and not actively killed. The Sathi practices seem to be the inspiration for the modern day cannibalism of the Aghori.

The British Indian government outlawed the practice due to continuous campaigning of Ram Mohan Roy; nevertheless the Manu Needhi brigade found other forums to subjugate women. The upper castes insisted that widows were ostracised in the community and were not allowed to head or conduct auspicious events; unfortunately this ostracisation of widows continues in the present despite the herculean efforts of the self-respect movement to eradicate it. 

Widows and female children were denied any share of the inheritance; similarly a widow was not allowed to remarry after the death of her husband.  Periyar countered these discrimination by advocating Self-respect marriages (since 1928) where the ceremony took place without any officiating priest and the language of the vows were understandable to all including the bride and groom; customarily the vows were recited in Sanskrit a dead language and hence the entire marriage began on superstitious blind adherence. 

It was this systematic opposition offered by the Self-respect Movement enabled then Chief Minister of Tamil Nadu C.N.Annadurai to pass and sign into law the Hindu Marriage Act (Madras Amendment), 1967.


Deva-dasi system: Forced underage prostitution


The Deva-dasi system was socio-economic method of subjugation of lower caste women. The system was setup to assimilate young girls before entering puberty so that they did not realise the depths of their captivity and sexual exploitation. It was done under the guise of marriage to the Temple or God; these women were forbidden from entering into any real relationship or family structure and subsequently their off springs were also hereditarily obligated to continue this practise. 

Their daily routine included cleaning the premises, lighting the lamp and dressing the idols of the temple; and serving as entertainment to the patrons and priests all under the guise of serving the temple. The Devadasi girls were trained to perform erotic dance and music (Sadir) from a tender age, modern day Bharadnattiyam has its roots firmly planted in this erotic dance tradition. (Dr. Sadhasivan, 2013)


The girls were forced to beg for food and clothes after their so called divine duties at temple so that they could survive. The sexual exploitation began as early as 8 years old; even before the child could begin to comprehend their actions. Poor, low caste girls were initially sold at private auctions and were later dedicated to the temples. Fathom the depravity of this tradition; these sexual slaves had no recourse to justice against any physical and mental abuse inflicted on them with or without consent; as the abusive act was performed under religious sanctions. 


The Deva-dasi system is the earliest known systematic and endemic propagator of the Stockholm syndrome. They were in every sense wife of the stones and indentured captives of the upper castes; this practice was introduced as early as 1230-1240 AD. Even in modern day India this practise still continues in the shadows, with a single section of the society calling for its revival. The Deva dasi system was outlawed under the madras presidency as early as 1947 but a nationwide ban was not promulgated till 1988.


The decimation of the Deva-dasi system would be incomplete without discussing Moovalur Ramamirtham Ammaiyar. The Self Respect Movement, had provided space for, and encouraged political activism among women activists; through their writings and speeches women activists articulated their consciousness about issues of concern to women as well as issues which were taken up by the Movement. 


Moovalur Ramamirtham Ammaiyar, who began her life as a Deva- dasi but transformed herself over the years to become a front ranking revolutionary in the Self Respect Movement,. (A. Karunanandham,1979) Moovalur Ramamirtham Ammaiyar was born in 1883 in the Isai Vellalar caste, and was initiated into the Deva-dasi customs at a young age. It was during this time she deeply reflected on the true nature of this custom and read the religious texts which advocated it. She inferred that men had forced certain women into this degrading profession to chase their indiscreet desires. This awareness led her to walk out of the Deva-dasi life and marry a musician Suyambu Pillai on her own accord.


Ramamirtham Ammaiyar carried out Deva-dasi abolition campaigns through the formation of Deva-dasi associations in local areas around Thanjavur. During her campaigns against the Deva-dasi system, she supported Dr.Muthulakshmi Reddy's efforts to end the system through legislation.
Apart from supporting and campaigning for Deva-dasi abolition, she also organised inter-caste marriages and marriages of consent for the Dasi to free themselves from their servitude to Hindu temples. 


In the course of her political career in the Self Respect Movement, she acted as a relentless campaigner against women's subordination. As a full-time activist of the Movement, she addressed various conferences and elaborated how Hinduism and upper caste men were legitimising women's subordination. In 1936 she published a novel in Tamil with the title ‘Dasikal Mosavalai Allathu Madhipettra Mainer’.

In the early twentieth century, women's entry into the academic field as writers and journalists representing their freedom to express their view was not welcomed by their gender counterparts. What is significant here is the fact that most of these writings by women valorised the traditional 'womanly virtues' such as chastity. Under this context an ex-Deva-dasi writing against the tradition was viewed as blasphemous by the upper castes; she faced staunch resistance against publication of the book.

The life history of Ramamirtham Ammaiyar was indeed extraordinary. From being a Devadasi, she became a foremost champion of women's cause in the Tamil districts. Ramamirtham ammaiyar does not represent an 'average' women activist of the Self Respect Movement, but one who removed the outer limit to which a woman activist of the Movement could reach out.
Self-respect movement and the rise of women.


The Self Respect Movement not only took up women's issues as one of its central concerns, but also provided great stimulus for women to participate in all its forums and activities. For instance the movement organised special women's conferences within the ambience of its general conferences.

During the Second Self Respect Women's Conference at Virudunagar 1931, lndrani Balasubramaniam delivered the presidential address. In this conference resolutions in support of birth control were passed. The conference resolved that women should not only be recruited for professions like teaching and medicine, but also be inducted into army and police; the conference called for powers to be delegated to the local magistrates to identify and catalogue those temples which encouraged Deva-dasi system.  


While special women's conferences provided an exclusive space for women activists of the Self Respect Movement to articulate themselves on issues, their participation in general conferences was also substantial. That is women were not isolated within the Movement. Often the much honoured role of delivering the inaugural addresses of the general conferences fell on the shoulders of women activists. To cite a few instances Indrani Balasubramaniam inaugurated the Third Self Respect Conference at Virudunagar in 1932.


In piercing divergence to the nationalists and the independent women's organisations, the Self Respect Movement addressed women's issues in a profoundly different fashion. The nationalist organisation took up issues affecting women in isolation, but the self-respect movement viewed the issues as entangled having a common foundation in patriarchy.
The philosophical thrust of the Movement led it to question Brahmanism and Hinduism; the legitimising forces of patriarchy in Tamil society. As such, the Self Respect Movement developed a scathing criticism of the vital categories of patriarchy such as marriage, female monogamy and chastity.


We need to be aware that these categories remained valorised in the discourse of the nationalist organisations. Women’s involvement in the Movement was also extensive. The Movement provided space for women activists to involve in all its activities as equals to male activists. The women activists of the Self Respect Movement exhibited strong anti-patriarchal awareness and discounted traditions which were sanctified by religion for the sole purpose of enchaining women.

Conclusion


In addition to many of the anti-Caste and Tamil nationalist ideologies; the Self-Respect Movement held at its core deeply feminist principles. Gender relationships were actively divorced from Brahminical patriarchy and women's rights over their physical, sexual and reproductive choices were celebrated. We have seen above the methodologies used to systematically exploit women under the name of rituals, tradition and religion namely Sathi, Devadasi system and gender class warfare; though significant roads have been made to reach a gender equal society one must understand that the war against gender exploitation is a Trans-generational war. 

The rise of the Self-respect movement has helped women win many battles against gender exploitation but the war is far from over due to the recent rise in Hindu socialism. In Periyar's society, women were to be allowed access to contraception and even permanent birth control measures. Women were given the right to choose partners as well as divorce them and remarry. Widowhood was not castigated through religious beliefs. Heterosexual partnerships were radically transformed by advocating for eradication of gender hierarchies and roles.


These philosophies enticed several women from all walks of life to the movement. Women included former prostitutes, wage labourers, doctors, former Deva-dasis and teachers. Women in the movement worked on issues most closely affecting women's like advocating for alcohol prohibition, widow remarriage, inheritance equality, supporting survivors of domestic violence and the anti-temple prostitution (Devadasi system); the Self-respect movement is often criticised for perceived exclusion of Dalit leadership, two Dalit women namely, Veerammal and Annai Meenambal Shivraj were key to the nourishment of the movement. 


Neelambigai Ammaiyaar presided over the Tamil Nadu Women Conference, 1938 which prescribed the title "Periyar” to E.V. Ramasamy  Naicker.  The title “Periyar” meaning the elder or wise one.  The final goal of gender equality is in sight due to the rise of the Self-respect movements.

Bibliography


Karunanandham, 1979, ‘Ethirthaar’: Thanthai Periyaar. 11(133-134). Canara Printers, Chennai
K.P. Neelamani, 2006, ‘Pengal Maanadu Soottiya Periyar Pattam’: Thanthai Periyaar. 27(123-131), Liyo Publishers.

K. Veeramani, 2004, Asal Manu Dharuma Saasthiram as it is in 1919, Dravidar kazhagagam Publication, Chennai 

Dr. Joyi Balan Vilathangara, 2009, ‘Maru Maraikkan Kalabam Dhakshina Bharathathile
Aaadhya    bowragasha porattam’: Vaikunna Samiyum Saamugika Navodhanavum. 3(38– 49). Chintha Publishers, Tiruvanandapuram.


Vayalar Madhavan kutty, 2016, ‘Mulacheththi Parambile Nangeli’: Vayalarile kanal pookkal. 13 (80-84), Vakkuyir Publishers, Thiruvanandapuram.

Nidhi Surenthiranath, 2013, ‘200 years on, Nangeli’s sacrifice only a Fading memory’,
‘The Hindu’ (21st October)


Dr. Sadhasivan, 2013, ‘Devadasigalin Vazhkai & Thamizhnattin  Nunkalaigalum  Devadasigalum’: Thamizhagaththil   Devadasigal. 4(91-109), 11(295-318). Offset Printers, Chennai.

A Venkataachala Naicker,1882 (Reprinted in 2014), ‘Udankattai Eatri Udamaigalaip pariththathu’ : Hindumadha Aachara Aabasa Dharsini. (196-197). Periyar Books Publications, Chennai

D. Gopal Chetty, 1920, ‘Mudivu’: Aadhi Dravidar Poorva Sariththiram. 7(31-35). Ramasamy Chettiyar Printeres, Chennai.

திங்கள், 24 டிசம்பர், 2018

மனிதிகளும் சபரிமலைக் கலவரமும்


ஆணும் பெண்ணும் சமம் என்றும், பெரியார் வழிவந்தவர்கள் நாங்கள் என்றும் சொல்லி, சபரிமலையில் ஏறும் உரிமை எங்களுக்கும் உண்டு என்றும், புரட்சிசெய்கிறோம் என்றும் சொல்லிக்கொண்டு, சபரிமலை நோக்கிச்சென்ற மனிதி குழுவினரில் 11 பேர் பம்பை வரை சென்று கேரளாவில் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கியதோடல்லாமல், தமிழ்நாட்டிலும் பெண்ணியவாதிகளின் செயற்பாடுகளுக்கும் பெரியார் உணர்வாளர்களுக்கும் களங்கம் உண்டாக்கியிருக்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் பெரியார் உணர்வாளர்கள் என்பது எவ்வளவு உண்மையோ, பக்தியினாலும் மூடப்பழக்கங்களினாலும் வரும் கேடுகளை எடுத்துச் சொல்வதில் பெரியார் பற்றாளர்கள் தயங்குவதே இல்லை என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவிற்கு "பக்தர்கள்" கோவில்களுக்குச் செல்வதற்குத் தடைவிதித்தால் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதில் முதன்மையானவர்கள் பெரியார் தொண்டர்களே என்பதும் உண்மை.
இப்படியிருக்க, இது இரண்டாவது "வைக்கம் போராட்டம்" என்று சொல்வது மிகவும் நகைப்பிற்குரியதாகவும், வைக்கம் போராட்டத்தையே அவமதிப்பதாகவும் இருக்கிறது.
பம்பையில் நடந்த நேற்றைய சம்பவமும், இதற்குமுன் நடந்த சில சம்பவங்களையும் கவனித்ததில், ஒரு போராட்டத்தை எப்படி நடத்துவது என்ற பக்குவம் அற்றவர்களாக மனிதி அமைப்பினர் இருக்கிறார்களோ என்ற எண்ணத்தைத்தான் தோற்றுவிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருக்கும் விதிகளை ஒரே நாளில் உடைத்தெறிய முடியும் என்று நம்பி, செயலில் இறங்குவது அறிவீனமேயன்றி புரட்சியல்ல.
பல நூற்றாண்டுகளாக உள்ள சம்பிரதாயங்களை மாற்றச் சில வருடங்களாவது திட்டமிட்டு, தக்க சமயத்தில் களமாடினால்தான் வெற்றியடைய முடியுமேயன்றி, பெருமளவில் மக்கள் பலமோ, பண பலமோ இல்லாமல் இப்டிப்பட்ட செயல்களில் இறங்குவது துயரத்தையே கொடுக்கும்.
அப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது நேற்றைய நிகழ்ச்சி.
உண்மையிலேயே பக்தியுடன் செல்பவர்களாக இருந்தால் மலைக்குச்செல்லும், மற்ற பக்தர்களைப்போல்,
குருசாமிகளிடம் மாலைபோட்டு, விரதமிருந்து, தினமும் காலையும் மாலையும் கோவிலுக்குச் சென்று ஐயப்பப் பூஜையில் கலந்தும், ஐயப்னை வழிபட்டும் விரத முடிவில் இருமுடி கட்டியும், மாலைபோட்ட பக்தர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, குடும்பத்தாரும் மற்ற பக்தர்களும் வழியனுப்ப, சபரிமலைக்குச் செல்லும் உரிமையைப் பெறவேண்டும்.
அல்லது,
பெண்களுக்கு மட்டும் ஒருநாளை ஒதுக்கித்தாருங்கள், அன்றையதினம் நாங்கள் மலையேறுகிறோம் என்று அரசாங்கத்திடமோ கோவில் நிர்வாகத்திடமோ அனுமதி பெற்றிருக்க வேண்டுமே தவிர, சுற்றுலா செல்வதுபோல் நினைத்த வேகத்தில், அல்லது எங்களால் முடியும் என்ற ஆணவத்தோடு செல்வது எல்லா இடத்திலும் பயனளிக்காது. "நாங்க யார்னு காட்றோம்" என்று சவால் விட்டு தமிழ்நாட்டுப் போலீஸிடம் வீரம்காட்டி, அவர்களின் அமைதியைக் கண்டு வெற்றி பெற்றுவிட்டதாக எண்ணிக்கொண்டதன் விளைவுதான் இந்த விபரீதத்தின் வித்தாக அமைந்துவிட்டது.
ஆம், அவர்களின்(கோவில்) விதிப்படி ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்கள், விரதமில்லாமல், தினம் பூஜை செய்யாமல், இருமுடி கட்டாமல் வீம்புக்காகக் கோவிலில் நுழைவோம் என்று சொன்னால் உண்மையான பக்தர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள்.
கல்லால் அடித்தும் தேங்காயால் அடித்து மண்டையை உடைப்போம் என்று சொல்லி விரட்டியதையும், இவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஓடி வந்ததையும் திரும்பத்திரும்பத் தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்படுவதையும்,
இந்தப் பயணத்தில் சென்ற மனிதி குழுவிலுள்ள பெண்களை, பக்தர்களும் பகையுணர்ச்சி கொண்டோரும் இவர்கள் தீவிரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும், நக்ஸல்கள் என்றும், பலவாறாகப் பேசுவதையும், இவர்கள் கேரளாவிலிருந்து திரும்பிவரும் இரயில் பெட்டிகளைக் கல்லால் அடித்தும், இரயில் கடந்தவுடன் தண்டவாளத்தில் சாணி கரைத்து ஊற்றி தீட்டுக் கழிப்பதையும் கேட்கவும் பார்க்கவும் வருத்தமாகத்தான் உள்ளது.
இனியாவது போராட்டங்களில் அனுபவமிக்கவர்களின்/ தோழமைக்கட்சிகளின் அறிவுரைகளைக் கேட்டு செயலில் இறங்குவதே நல்லது என்பதைப் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
மனிதிகளுக்கு இன்னொரு முக்கியமான செய்தி, எந்த அமைப்பின் மூலமாகப் போகிறோமோ அந்த அமைப்பின் பெயரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்து, நாங்கள் பெரியாரிஸ்டுகள், இது இன்னொரு வைக்கம் போராட்டம் என்று சொல்லி உண்மையான பெரியாரிஸ்டுகளை அவமானப்படுத்தாதீர்கள் அல்லது வெறுப்பேற்றாதீர்கள்.
ஏனென்றால், முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, வைக்கம் போராட்டம் என்பது கோவில் நுழைவுப் போராட்டமல்ல. கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்ந்த சாதியினர் நடக்கக்கூடாது என்றிருந்த கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து அந்தத் தெருக்களில் நடக்கும் உரிமையை எல்லோருக்கும் வாங்கிக்கொடுத்த போராட்டம் அது.
அதே போல, எந்த பெரியார் தொண்டரும் கோவிலுக்குச் சென்று "கடவுளை வழிபடுவதை" ஒரு சவாலாகச் செய்ய மாட்டான்.
கொண்ட கொள்கையை விட்டு இருமுடியை தலையில் சுமக்க மாட்டான்.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், பெரியாரின் படை ஒரு போராட்டத்திற்குத் தயாராகிறது என்றால் பத்துப் பதினைந்து பேரோடு களமிறங்க மாட்டார்கள், ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து வெற்றியடையும் வரை போராடுவார்கள். தப்பித்தால் போதுமென்று ஓடிவர மாட்டார்கள்.
எனவே, இனியாவது கவனமாகச் செயல்படுங்கள். அவசரம் ஆபத்தைத்தான் விளைவிக்கும்.
- லதாராணி பூங்காவனம்

புதன், 10 அக்டோபர், 2018

சின்மயியை அவமானப்படுத்தும் சுபவீ

                                                                                                
திரு. சுபவீர பாண்டியன் அவர்களுக்கு….               

பாடகி சின்மயி, 2004 ஆம் ஆண்டு, கவிஞர் வைரமுத்து தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக Metoo  பதிவு செய்தார். அந்தப் பதிவை ஏளனம் செய்யும் விதமாக ஒரு தரமற்ற பதிவை உங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறீர்கள்.

"இன்ஸ்பெக்டர், ஒரு பாலியல் புகார் குடுக்க வந்திருக்கேன்" 

" தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா #Metoo 

இதுதான் உங்கள் பதிவு.

பாதிக்கப்பட்ட பெண் 14 வருடங்கள் அந்த வலியைச் சுமந்திருந்த
வேதனை உங்களைப் போன்றவர்களால் உணர்ந்துகொள்ள முடியாது என்பது  உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது.

கவிஞர் வைரமுத்து உங்களுக்கு அரசியல் ரீதியாக  வேண்டப்பட்டவராக இருக்கலாம். பாடகி சின்மயி நீங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்கு எதிர்கட்சியினராக இருக்கலாம். அதற்காக  ஒரு பெண்ணை இவ்வளவு அநாகரீகமாகவா பேசுவீர்கள்?

பெண்ணுக்கு சம உரிமை வேண்டும், பெண்கள் முன்னேற்றம் பெறவேண்டும், என்று மேடைக்கு மேடை பேசிக்கொண்டு, நான் ஒரு கருப்புச் சட்டைக்காரன், பெரியார்  கொள்கையாளன் என்று பேசுவதெல்லாம் வெளிவேஷமா? அல்லது பணத்திற்காகவும் புகழுவுக்காகவும் பேசப்பட்ட வீர வசனங்களா?

ஒரு பெண்ணை பெண்ணாகக் கூடப் பார்க்க முடியாத நீங்கள் பெரியார் பற்றாளன் என்று சொல்வது அபத்தமாக இருக்கிறது.   உண்மையிலேயே, பெண்களை அவமதிக்கும் இது போன்ற பதிவுகளைப் பதிவிட்டு   பெரியாருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திவிட்டீர்கள். 

"தப்பு நடந்து 14 வருஷம் ஆயிடுச்சா? " என்ற இந்த இழிவினும் இழிவான சொற்களால்  ஒட்டுமொத்தப் பெண்களின் மனத்தை ரணப்படுத்தி இருக்கிறீர்கள். 

சின்மயி சொன்ன செய்தி உண்மையோ பொய்யோ,  வைரமுத்து அப்படி நடந்து கொண்டாரா இல்லையா என்பதையெல்லாம் தாண்டி, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி டிவிட்டர் பகுதியில்  செய்தியைப் பகிர்ந்தது மாபெரும் குற்றமே.

இந்தத் தவறுக்கு, நீங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் உங்களுக்கு எதிராக பெண்களின் குரல் ஒலிக்கும்.

https://twitter.com/Suba_Vee/status/1049998073743568896

#Metoo @


-கவிஞர்.லதாராணி பூங்காவனம். எம்.ஏ., எம்.காம்.,